ஆயர் பொதுப் பதில்குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயர் பொதுப் பதில்குருவின் ஆட்சி சின்னத்தின் பொது வடிவமைப்பு

ஆயர் பொதுப் பதில்குரு அல்லது பொது வழக்கில் முதன்மை குரு (ஆங்கில மொழி: vicar general) என்பவர் ஒரு மறைமாவட்ட ஆயரின் முதன்மையான பதில் ஆள் ஆவார். இப்பதவியினை வகிப்பவர், தமது பதவியின் வாயிலாக, சட்டத்தால் மறைமாவட்டம் முழுவதிலும் மறைமாவட்ட ஆயருக்குரிய அதே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அதாவது சட்டத்தால் ஆயரின் சிறப்பு ஆணை தேவைப்படும் காரியங்கள் தவிர, அனைத்து நிர்வாகச் செயல்களையும் நிறைவேற்ற அவர் அதிகாரம் கொண்டுள்ளார். இதனால் திருச்சபைச் சட்டப்படி ஒரு மறைமாவட்டத்தில் அம்மறைமாவட்ட ஆயருக்கு அடுத்து மிக உயரியப்பதவி இது ஆகும்.[1]

இப்பதவி மேற்கத்திய கிறித்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியத்தில் மட்டுமே இப்பட்டம் இப்பெயரில் வழங்கப்படுகின்றது. கிழக்கில் இப்பதவியினை protosyncellus என்று அழைப்பர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. திருச்சபை சட்டம் 475
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயர்_பொதுப்_பதில்குரு&oldid=1811154" இலிருந்து மீள்விக்கப்பட்டது