ஆபெரா மினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆபெரா மினி
Opera Mini 2015 logo.svg
Opera Mini for iPhone.png
ஆபெராமினி ஐபோனில் காண்பிக்கப்படுகிறது.
உருவாக்குனர்ஆபெரா மென்பொருள்
தொடக்க வெளியீடுஆகஸ்ட் 10, 2005
தளம்ஜாவா எம்.ஈ(Java ME) , ஆன்ரொய்ட் , வின்டோஸ் தொலைபேசி , ஐ இயங்குதளம் , பிளாக்பெர்ரி , சிம்பியன் , சீபூ
கிடைக்கும் மொழிபல[1]
மென்பொருள் வகைமைகையடக்கத் தொலைபேசி இணைய உலாவி
உரிமம்இலவச மொன்பொருள்
இணையத்தளம்http://www.opera.com/mini/

ஆபெரா மினி (Opera Mini, ஒப்பெரா மினி) கையடக்கத் தொலைபேசி, நுண்ணறிவு தொலைபேசிகள் மற்றும் பீடிஏ க்களுக்காகத் தயாரிக்கப்படும் இலவச இணைய உலாவியாகும். ஆபெரா நிறுவனம் வேறுசில அனுசரனையாளர்களுடன் இணைந்து இம் மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. கூகுல் நிருவனம் இதன் உத்தியோகபூர்வ தேடல் பங்காளியாகும்.

ஆபெரா மினி உலாவியானது நேரடியாகத் தனது புரொக்சி சேவையகங்களையே பயன்படுத்துகிறது, இதன் மூலமாக கையடத்தொலைபேசியில் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் இணையத்தளங்களைக் காட்டமுடியும் என்பதுடன் கையடக்கத்தொலைபேசிகளில் உள்ளமைந்த உலாவிகளில் காண்பிக்க முடியாத பாரிய தளங்களையும் ஆபெரா மினியினால் தனது புரொக்சி மையங்களைக் கொண்டு சுருக்குதல் மற்றும் விரித்தல் தொழினுட்பம் மூலமாகத் தகவல்களை வேகமாக் காண்பிக்க முடியும். இதன் 4ம் பதிப்புவரையில் ஜாவா எம்.ஈ இயங்குதளத்தினையே பயன்படுத்தியது எனினும் தனது 5வது பதிப்பானது வின்டோஸ் கையடக்கத் தொலைபேசி, நோக்கியாவின் சிபியன் ஓஎசு மற்றும் அப்பிள் இயங்குதளம் என்பவற்றிலும் இயங்கக்கூடியவாறு வெளியிடப்பட்டது.

இதன் மூலமாக கையடக்கத் தொலைபேசிகளில் சிக்கலான மொழிகளையும் காட்டக்கூடியதாக இருந்தது,

2011ஆம் ஆண்டு மார்ச்சு மாதமளவில் ஆபெரா மினியானது 100 மில்லியன் பயனர்களையும் 2 பில்லியன் நாளாந்த பக்க பார்வைகளைத்தாண்டி உலகத்தில் மிக அதிகமாகப் பாவனைசெய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுக்கான உலாவி என பெயர் பெற்றது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Opera Mini translated into over 50 languages; 15 more to come later this month". 2007-11-07. 2013-06-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-12-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபெரா_மினி&oldid=3232954" இருந்து மீள்விக்கப்பட்டது