ஆன் திரெயிசுமென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன் மேரி திரெயிஸ்மென்
பிறப்புAnne Marie Taylor
(1935-02-27)27 பெப்ரவரி 1935
வேக்ஃபீல்ட், யார்க்‌ஷயர்,இங்கிலாந்து
இறப்பு9 பெப்ரவரி 2018(2018-02-09) (அகவை 82)
வாழிடம்நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
துறைஉளவியல்
பணியிடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்நியூஹாம் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ரிச்சர்ட் சி ஓல்ட்ஃபீல்ட்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ஆய்வு முனைவர் பட்ட மாணவர்கள், நான்சி கான்வீஷர், நில்லி லேவி
அறியப்படுவதுதகவல் ஒருங்கினைப்புக் கோட்பாடு, கவனக் கோட்பாடு
விருதுகள்தங்க மூளை விருது (1996)
கிராவ் மேயர் விருது (உளவியல்)(2009)
தேசிய அறிவியல் பதக்கம் (2011)
துணைவர்மைக்கெல் திரெயிஸ்மென் (1960–1976, மணவிலக்கு)
டேனியல் கானமென் (1978–2018) இறுதிவரை

ஆன் மேரி திரெயிஸ்மென் (née டெய்லர் ; 27 பிப்ரவரி 1935 [1] - 9 பிப்ரவரி 2018)[2][3][4]அறிவாற்றல் உளவியலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆங்கில உளவியலாளர் ஆவார். பார்வை கவனம் , உள்ளுணர்தல் , மற்றும் நினைவாற்றல் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். 1980களில் ஜி. கலேட் என்பவருடன் இணைந்து தனது கவன ஒருங்கிணைப்புக் கோட்பாடு பற்றிய மிகுந்த செல்வாக்குள்ள கருத்துகளை வெளியிட்டார்.

திரெயிஸ்மென் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். புகழ்பெற்ற ஆய்வு முனைவர்களான நான்சி கன்வீஷர் மற்றும் நில்லி லாவி ஆகியோர் இவரின் மேற்பார்வையின் கீழ் தனது ஆய்வினை மேற்கொண்டனர். 2013 இல், தனது கவனம் பற்றிய முன்னோடி ஆய்வுகளைச் செய்தமைக்காக திரெயிஸ்மென், ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் இருந்து தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார்.[5]

இவரது நீண்டகால பணியில், மனித சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் வழிநடத்துதலுடன், தகவல்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது என்றும் அவை எவ்வாறு சரியான பொருளாக ஒருங்கிணைக்கப்படுகிறது என்றும், ஆய்வு செய்து அதனை கோட்பாட்டு ரீதியிலும் பரிசோதனை ரீதியிலுமான வரையரைகளை வெளியிட்டார்.

வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஆன் திரெயிஸ்மன் இங்கிலாந்திலுள்ள, யார்க்ஷயர் , வேக்ஃபீல்ட் என்ற இடத்தில் பிறந்தார். இரண்டு வருடங்கள் கழித்து, அவரது குடும்பம் ரோசெஸ்டர், கென்ட் என்ற ஒரு கிராமத்திற்கு குடிபெயர்ந்தது [6] அங்கு அவரது தந்தை பெர்சி டெய்லர் இரண்டாம் உலகப் போரின் போது தலைமைக் கல்வி அதிகாரியாகப்பணிபுரிந்தார்.[7] அவரது தாயார் சுசான் டூரென் பிரஞ்சுப் பெண்மணியாவார் [1] 11 வயதில், திரெயிஸ்மென் தன்னுடைய குடும்பத்துடன் , பெர்க்ஷயரில் உள்ள ரீடிங் என்ற நகரத்திற்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் பெண்கள் இலக்கப்பள்ளியான கென்ட்ரிக் பள்ளியில் சேர்ந்தார்.[8] அந்த நேரத்தில் ஆங்கில கல்வி முறையில், மேல்நிலை பள்ளியில் மூன்று பாடங்களைக் கட்டாயமாகத் தெர்வு செய்யும் நிலை இருந்தது. எனவே திரெயிஸ்மென் மொழிக்கலை (பிரெஞ்சு, லத்தீன் மற்றும் வரலாறு) மீது கவனம் செலுத்தினார்.

திரெயிஸ்மென,1954 இல், கேம்பிரிட்ஜில் உள்ள நியூஹாம் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியத்தில் தனது இளங்கலைப் பட்டம் பெற்றார் இது அவருக்கு உளவியலில் மற்றொரு இளங்கலைப் பட்டம் பெற உதவித்தொகை கிடைக்க வழிசெய்தது. இந்த கூடுதல் வருடத்தில், ரிச்சர்ட் கிரிகோரியின் மேற்பார்வையின் கீழ் திரெயிஸ்மென் கல்வி பயின்றார். இவர் பல்வேறு உள்ளுணர்வுப் பரிசோதனைகள் மூலம் மனதைஅறியும் வழிகளை திரெயிஸ்மெனுக்கு அறிமுகம் செய்துவைத்தார் பல்வேறு வழிகளில் அறிமுகப்படுத்தினார்.[9] திரெயிஸ்மென் கேம்பிரிட்ஜில் இருந்த பொழுது, அவர் நாட்டுப்புற இசை காட்சிகளில் ஆர்வமாக ஈடுபட்டார்.[10]

1957 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளரான கரோலஸ் ஓல்ட்ஃபீல்ட்டின் கீழ் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.[9] திரெயிஸ்மென் முதலில் அப்பாசியா என்ற குறைபாடு பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். ஆனால் விரைவில் மன அழுத்தம் பற்றிய ஆய்வுகளில் ஆர்வமேற்பட்டு அதனைத் தொடர்ந்தார். டோனால்ட் பிராட்பென்ட்டின் என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் புலனுணர்வு மற்றும் தகவல்தொடர்பு குறித்த தனது பார்செப்சன் அண்ட் கம்யூனிகேஷன் என்ற ஆய்வு நூலை வெளியிட்டார்..[11] மூன்று வருட ஆய்வுக்குப் பின்னர், 1960 ஆம் ஆண்டில் மற்றொரு ஆக்ஸ்ஃபோர்ட் பட்டதாரி மாணவரான மைக்கேல் திரெயிஸ்மேன் என்பவரை மணந்தார்.[1] இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், 1962 இல், ”தேர்ந்தெடுக்கப்பட்ட கவனம் மட்டும் பேச்சுணர்வு” என்ற தனது ஆய்வை திரெயிஸ்மென் நிறைவு செய்தார்.[9]

1976 ஆம் ஆண்டில், மைக்கேலுடனான திருமணம் விவாகரத்தில் முடிந்தது.[1] டானியல் கான்மன் என்பவரை 1978 ஆம் ஆண்டில் மறுமணம் செய்து கொண்டார்.இவர் 2002 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் மெமோரியல் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது [12] திரெயிஸ்மென் பிப்ரவரி 9, 2018 அன்று பக்கவாதம் காரணமாக இறந்தார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Genzlinger, Neil (13 February 2018). "Anne Treisman, Who Studied How We Perceive, Dies at 82". The New York Times.
  2. Dean of the Faculty. (2018). [Obituary] Anne Marie Treisman. Retrieved 12 Feb 2018, from https://dof.princeton.edu/about/clerk-faculty/emeritus/anne-marie-treisman பரணிடப்பட்டது 2020-03-18 at the வந்தவழி இயந்திரம்
  3. "Anne Treisman, 1935-2018". பார்க்கப்பட்ட நாள் 12 February 2018.
  4. Kahneman-Treisman Center for Behavioral Science & Public Policy. (2018). Anne Treisman 1935 - 2018. Retrieved 14 Feb 2018, from https://behavioralpolicy.princeton.edu/news/anne-treisman-1935-2018
  5. "Treisman wins National Medal of Science for psychology research". Princeton University. 3 January 2013. பார்க்கப்பட்ட நாள் 9 March 2013.
  6. Sheehy 2016, ப. 580.
  7. "One on one...with Anne Treisman". the psychologist. 9 October 2010. பார்க்கப்பட்ட நாள் 18 November 2013.
  8. "Anne Treisman". sfn.org. 16 April 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2018.
  9. 9.0 9.1 9.2 விக்கிபீடியா: உளவியலின் பயன்பாட்டின் வரலாறு / கவனிப்பு குறித்த ஆராய்ச்சி வரலாறு
  10. Lynskey, Dorian (2016). "Folk story". Cam (77): 36–41. 
  11. Broadbent (1949). Perception and Communication. Pergamon Press. https://archive.org/details/in.ernet.dli.2015.139166. 
  12. Kahneman. "Autobiography". nobelprize.org.
  13. "Anne Treisman, pathbreaking psychologist who developed a theory of perception, dies at 82".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_திரெயிசுமென்&oldid=3924555" இலிருந்து மீள்விக்கப்பட்டது