உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவாற்றல் உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவாற்றல் உளவியல் (Cognitive psychology) என்பது உளவியல் துறையின் உட்பிரிவு ஆகும். இது மனதின் செயல் முறைகளை விளக்குவதாகும். மக்களின் புரிதல், ஞாபகம், பேசுதல், பிரச்சினைக்கான தீர்வு காணல் போன்ற மனதின் செயல்முறைகளை விளக்குகிறது.[1]

அறிவாற்றல் உளவியல் இரண்டு பண்புகளால் முந்தைய உளவியல் அணுகு முறைகளிலிருந்து மாறுபடுகிறது.

  1. தன்னைச் சோதித்துப் பார்க்கும் தற்சோதனை (introspection) முறையில் அறிவியல் முறையில்லை. ஆனால் அறிவாற்றல் உளவியல் முற்றிலும் அறிவியல் முறை.
  2. அதுபோல் பிராய்டின் உளவியலில் சரியான விசாரனை அணுகுமுறையில்லை. ஆனால் அறிவாற்றல் உளவியலில் சரியான விசாரணை அணுகுமுறைகள் உண்டு.

மேலும் அறிவாற்றல் உளவியல் உள் மனதினூடே இருக்கும் நம்பிக்கை, ஆசை, சிந்தனை, அறிவு மற்றும் ஊக்கம் போன்ற நிலைகளை வெளிப்படையாக நிரூபிக்கிறது. இதன் ஆரம்ப காலங்களில் விமர்சகர்கள் "அறிவாற்றல் உளவியலின் அறிவார்ந்த அனுபவம் உள் மனநிலைகளோடு ஒத்துப்போகவில்லை" என்றார்கள். ஆயினும் சகோதர துறையான "அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்" மூளையின் செயல்பாட்டை சான்றுகளுடன் விளக்க அது நேரடியாக மனநிலையோடு தொடர்புடையதாக இருந்தது. இதனால் அறிவாற்றல் உளவியலின் கருத்துகளுக்கு ஆதரவு கிடைத்தது.

அறிவாற்றல் இயல்பை பாடமாக பள்ளிகளில் பயிற்றுவிக்க துவங்கினார்கள். எண்ணமே செயலாகிறது என்பதை கண்டுணர்ந்ததால் அறிவாற்றல் உளவியல் எண்ணத்தை மாற்றுவதன் மூலம் அறிவாற்றல் நடத்தை சிகிச்சையிலும் (Cognitive Behavioral Therapy (CBT)) பயன்படுகிறது. இது நடத்தை உளவியலோடும் தொடர்புடையது.

வரலாறு

[தொகு]

அல்ரிக் நெய்சர் அவருடைய "அறிவாற்றல் உளவியல்" புத்தகத்தில் அறிவாற்றல் உளவியல் என்னும் சொற்பதத்தை முதன்முதலில் உருவாக்கினார். இந்த புத்தகம் 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[2][3] இதில் அறிவாற்றல் உளவியல் என்பதன் பொருளை கணினி செயல்படுவது போல் மக்கள் தகவல்களை உள் வாங்கி அதை மனதின் மூலமாக செயல்படுத்துகிறார்கள் என வரையறுத்திருக்கிறார். மேலும் மனம் என்பது கருத்துகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். இவருடைய தகவல்கள் உளவியலின் நெறியையும் நோக்கத்தையும் உயர்த்தியது. பகுத்தறிதல் (reasoning) போன்ற பல மனதின் செயல்பாடுகள் வரையறுக்க காரணமாயிருந்தது நெய்சரின் கருத்துகள்தான்.

நெய்சர் அறிவாற்றலைப் பற்றி தன் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு வரையறுத்திருக்கிறார். "அறிவாற்றல் என்ற வார்த்தை கீழ்க்கண்ட அனைத்து செயல்களையும் குறிக்கிறது. அதாவது புலன் வழி உட்செல்லும் உணர்வுகள் மூளைக்குள் கடத்தப்படுதல்,குறைத்தல், விரித்தல்,சேமித்தல்,மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருதல்,பயன்படுத்துதல் போன்றவை. சரியான தூண்டுதல் இல்லாவிட்டாலும் சில படங்கள் அல்லது பிரமைகள் மூலமாகவும் மேற்கண்ட செயல்கள் நடைபெறும். வெளிப்படையாக மனித இனம் செய்யும் அத்தனை வேலைகளும் அறிவாற்றலே! அத்தனை உளவியல் நிகழ்வுகளும் அறிவாற்றல் நிகழ்வுக ளே என்ற பரந்த வரையரையைக் கொடுத்தார்.

உசாத்துணை

[தொகு]
  1. Psychology: Making Connections by Gregory Feist and Erika Rosenberg (Jan. 5, 2009)
  2. Neisser, U. (1967). Cognitive psychology. New York, NY: Meredith.
  3. Note however that there was an earlier publication of the same name: Thomas Vener Moore's Cognitive Psychology, published in 1939. Neisser was not aware of that book when he chose his title (cf. Surprenant & Neath (1997), Psychonomic Bulletin & Review 4(3), 342-349.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவாற்றல்_உளவியல்&oldid=2221144" இலிருந்து மீள்விக்கப்பட்டது