உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன் சுயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் கே.சி. காம்பர்
பிறப்புரோசாலி மாடில்டா குவாங்கு சாவ்
12 செப்டம்பர் 1916
சின்யாங், ஹெனன், சீனக் குடியரசு
இறப்பு2 நவம்பர் 2012(2012-11-02) (அகவை 95)
லோசான், சுவிட்சர்லாந்து
புனைபெயர்ஆன் சுயின்
தொழில்எழுத்தாளர், மருத்துவர்
மொழிசீனம், ஆங்கிலம், பிரெஞ்ச்
குடியுரிமைபிரித்தானியர்
காலம்1942–2012
வகைபுனைகதை, வரலாறு, சுயசரிதை
கருப்பொருள்மா சே துங், சோ என்லாய்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஏ மெனி-ஸ்பிளென்டர்டு திங்
தி கிரிப்பிள்டு டிரீ
மை ஹவுஸ் ஹாஸ் டூ டோர்ஸ்
துணைவர்தாங் பாவோ-ஆங் (1938–1947)
இலியோன் கோம்பர் (1952–1958)
வின்சென்ட் இரத்தினசாமி (1960–2003)
பிள்ளைகள்(தத்தெடுத்தல்) தாங் யுங்மே, செவ் ஊய் இம்

ரோசாலி மாடில்டா குவாங்கு சாவ் (Rosalie Matilda Kuanghu Chou) [1] (12 செப்டம்பர் 1917 (அல்லது 1916) – 2 நவம்பர் 2012) [2] சீனாவில் பிறந்த யூரேசிய [3] மருத்துவரும், எழுத்தாளரும் ஆவார். ஆன் சுயின் என்பது இவரது புனைப் பெயராகும்.

இவர் நவீன சீனாவில் ஆங்கிலத்திலிம், பிரஞ்சு மொழிகளிலும் எழுதினார். கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை அடிப்படையாகக் கொண்டு தனது புதினங்களை அமைத்தார். மேலும் நவீன சீனாவின் கால அளவை உள்ளடக்கிய சுயசரிதை நினைவுக் குறிப்புகளையும் வெளியிட்டார். இந்த எழுத்துக்கள் சீனப் புரட்சியின் தீவிரமான மற்றும் வெளிப்படையான ஆதரவாளர் என்ற புகழை இவருக்கு பெற்றுத் தந்தன. இவர் இறக்கும் வரை பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தின் லோசேன் நகரில் வாழ்ந்தார்.

சுயசரிதை[தொகு]

இவர், சீனாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்திலுள்ள சின்யாங் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை சௌ வீ பெல்ஜியத்தில் படித்த சீன பொறியியலாளர், இவரது தாயார் பிளெமிசு என்பவராவார்.

இவார் ஆரம்பத்தில் 1931 ஆம் ஆண்டில் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியில் தட்டச்சுப் பணியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போது இவருக்கு இன்னும் 15 வயது கூட ஆகவில்லை. 1933 ஆம் ஆண்டில் இவர் என்ச்சிங் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தான்யூரேசியராக இருப்பாதால் பாகுபாடு காட்டப்படுவதாக உணர்ந்தார். 1935 இல் மருத்துவம் படிக்க பிரசெல்சுக்குச் சென்றார். 1938 ஆம் ஆண்டில் இவர் சீனாவுக்குத் திரும்பினார். ஒரு சீன தேசியவாத இராணுவ அதிகாரியான தாங் பாவோ-ஊவாங் என்பவரை மணந்தார். ஆன், சிச்சுவானின் செங்டூவில் உள்ள ஒரு அமெரிக்க கிறிஸ்தவ தொண்டு நிறுவன மருத்துவமனையில் வேலை செய்தார். இவரது முதல் புதினமான டெஸ்டினேஷன் சுங்கிங் (1942) என்பது இந்த காலகட்டத்தில் தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1940 ஆம் ஆண்டில், இவரும் இவரது கணவரும் தாங் யுங்மே என்ற பெண்குழந்தையைத் தத்தெடுத்தனர். [4]

1944 ஆம் ஆண்டில் பேரரசின் இலவச மருத்துவமனையில் மருத்துவத்தில் தனது படிப்பைத் தொடர இவர் தனது மகளுடன் இலண்டனுக்குச் சென்றார் - அங்கு இவரது கணவர் பாவோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். [5] பாவோ பின்னர் வாஷிங்டனுக்கும் பின்னர் மஞ்சூரியன் முன்னணிக்கும் அனுப்பப்பட்டார். 1947 ஆம் ஆண்டில், ஆன் இலண்டனில் இருந்தபோது, சீன உள்நாட்டுப் போரின்போது இவரது கணவர் போரில் இறந்தார்.

இவர் 1948 இல் கௌரவத்துடன் மருத்துவத்தில் இளங்கலப் பட்டம் பெற்றார். 1949 இல் குயின் மேரி மருத்துவமனையில் மருத்துவம் பயிற்சி செய்ய ஆங்காங்கிற்கு சென்றார். 1950 ல் கொரியாவில் கொல்லப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த திருமணமான ஆத்திரேலிய போர் நிருபர் இயன் மோரிசனை இவர் அங்கு சந்தித்து காதலித்தார். இவர்களது உறவை அதிகம் விற்பனையாகும் புதினமான எ மெனி-ஸ்ப்ளெண்டர்டு திங் ( ஜொனாதன் கேப், 1952) [5] என்பதில் சித்தரித்தார். மேலும் தங்களது உறவின் உண்மை அடிப்படையானது இவரது சுயசரிதை மை ஹவுஸ் ஹஸ் டூ டோர்ஸ் (1980) என்பதிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [6]

இறப்பு[தொகு]

ஆன் 2012 நவம்பர் 2 அன்று தனது 95 வயதில் லோசனில் இறந்தார்.

மனித நேயமிக்கவரும், மருத்துவரும், எழுத்தாளரும், மேலும் ஒரு பெண்ணுமான ஆன் சுயின் பற்றி ஜி.எம். கிளாஸ்கின் என்பவரால் 1995 ஆம் ஆண்டில் எ வுமன்: எ மெமோயிர் ஆப் ஆன் சுயின் வெளியிடப்பட்டது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alison Lake, ""Han Suyin, Chinese-born author of ‘A Many-Splendoured Thing,’ dies at 95"," Washington Post, 4 November 2012: "She later changed her middle name to Elizabeth, the name she preferred."
  2. "Renowned Chinese-born author dies". Australian Network News, 4 November 2012.
  3. Han Suyin – In voicing her Eurasian identity, she defined a people பரணிடப்பட்டது 2013-08-23 at the வந்தவழி இயந்திரம், Time Magazine, 13 November 2006. Retrieved 17 May 2012.
  4. Ding Jiandong: Han Suyin Research. Retrieved 17 May 2012 பரணிடப்பட்டது 4 ஆகத்து 2005 at the வந்தவழி இயந்திரம் archived at the Wayback Machine.
  5. 5.0 5.1 John Gittings, "Han Suyin – Chinese-born author best known for her 1952 book A Many-Splendoured Thing" (obituary), The Guardian, 4 November 2012.
  6. John Jae-nam Han, "Han Suyin (Rosalie Chou)". Asian-American Autobiographers: A Bio-bibliographical Critical Sourcebook, p. 104. Retrieved 17 May 2012.
  7. Gerald Marcus Glaskin, A Many-Splendoured Woman: A Memoir of Han Suyin (Singapore: Graham Brash, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-218-045-2).

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_சுயின்&oldid=3792121" இலிருந்து மீள்விக்கப்பட்டது