ஆன்ஸ் ராஜ் மகிளா மகா வித்யாலயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ஸ் ராஜ் மகிளா மகா வித்யாலயா
வகைதனியார் மகளிர் கல்லூரி
உருவாக்கம்1927
நிறுவுனர்மகாத்மா ஹன்ஸ்ராஜ்
சார்புகுரு நானக் தேவ் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தலைவர்முனைவர் பூனம் சூரி
அமைவிடம்
மகாத்மா ஹன்ஸ் ராஜ் மார்க், கிராண்ட் டிரங்க் சாலை
, , ,
144008
,
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்

ஆன்ஸ் ராஜ் மகிளா மகா வித்யாலயா(Hans Raj Mahila Maha Vidyalaya) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியாகும். 1927 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் மகாத்மா ஹன்ஸ்ராஜ் என்பவரால் நிறுவப்பட்ட இக்கல்லூரி இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டில் பஞ்சாப்பின் ஜலந்தருக்கு மாற்றப்பட்டது.


பெண்களுக்கு மதிப்பு அடிப்படையிலான, வேலைவாய்ப்பு சார்ந்த தரமான கல்வியை வழங்க ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 5000 க்கும் மேற்பட்ட பெண் மாணவர்கள் பயின்று வருகிறனர். குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ள[1] இக்கல்லூரியில்

இக்கல்லூரியானது தயானந்த் ஆங்கிலோ-வேத கல்லூரி நிர்வாகக் குழுவால் (DAVMC) நிர்வகிக்கப்படுகிறது. இதன் தற்போது கல்லூரியின் முதல்வராக திருமதி அஜய் சரீன் பணியாற்றிவருகிறார்.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • ட்ரிப்யூன் அறக்கட்டளையின் முதல் பெண் தலைவர் சர்லா கிரேவால்
  • திருமதி. சஞ்சல், பஞ்சாப் விளையாட்டுத் துறையின் முதல் துணை இயக்குநர்
  • குர்வீன் சித்து, தேசிய தணிக்கை மற்றும் கணக்கு அகாடமியின் துணை இயக்குனர்
  • ஜே கக்ரியா, HRMMV இன் முன்னாள் முதல்வர்
  • ஜலந்தரில் உள்ள பிடி ஆர்யா கல்லூரியின் முதல்வர் சரிதா வர்மா
  • ஜலந்தரில் உள்ள ஜிஎன்டி பல்கலைக்கழகத்தின் முதல்வர் உஷா கபூர்
  • நீலம் சேத்தி, குர்தாஸ்பூரில் உள்ள SD கல்லூரியின் முதல்வர்
  • சுமிதா தவ்ரா, ஐஏஎஸ் அதிகாரி
  • சரளா பரத்வாஜ், தேசிய சமஸ்கிருத இலக்கிய விருது பெற்றவர்
  • ரச்சனா பூரி
  • சுனிதா ராணி, அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்
  • சுர்பி ஜோதி, தொலைக்காட்சி, பஞ்சாபி திரைப்பட மற்றும் நாடக நடிகை , ரௌலா பை கயா மற்றும் குபூல் ஹை ஆகியவற்றால் மிகவும் பிரபலமானவர்
  • லெப்டினன்ட் நந்திதா பரத்வாஜ், 2015 குடியரசு தின அணிவகுப்பில் கடற்படையின் முதல் மகளிர் குழுவின் பிளாட்டூன் கன்டிஜென்ட் கமாண்டர்
  • நளினி பிரியதர்ஷ்னி, கவிஞர் மற்றும் எழுத்தாளர்
  • பீனு ராஜ்பூட், ஆவணப்படத் தயாரிப்பாளர், டெல்லி [2]

விருதுகள்[தொகு]

  • அமிர்தசரஸில் உள்ள GND பல்கலைக்கழகத்தில் மண்டல இளைஞர் விழாவில் முதல் பரிசு
  • GND பல்கலைக்கழக விளையாட்டு சாம்பியன்ஷிப் (தொடர்ந்து 22 ஆண்டுகள்)

இந்தக் கல்லூரிக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட நட்சத்திரக் கல்லூரி என்ற அந்தஸ்தும் உள்ளது. இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினால் (இந்தியா) "சிறந்த கல்லூரியாக" அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின்தரமதிப்பீட்டில் 4 மதிப்பெண்களுக்கு 3.83 (பெண்கள் கல்லூரிகளில் இந்தியாவிலேயே அதிக மதிப்பெண்) ஏ தகுதி பெற்று மறு அங்கீகாரம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல்" (PDF).
  2. "A journey of a never-say-die woman, from a small village to tinsel town". Times Of India.