ஆனையிறவு இராணுவத் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனையிறவு படைத் தளம்
ஆனையிறவு, வட மாகாணம்
வகை இராணுவத் தளம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை தரைப்படை
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
19?? – 2000 மற்றும் 2008 - தற்போது வரை
சண்டைகள்/போர்கள் முதலாம் ஆனையிறவு சமர், இரண்டாம் ஆனையிறவு சமர், மூன்றாம் ஆனையிறவு சமர்
காவற்படைத் தகவல்
காவற்படை டிவிசன் 55

ஆனையிறவு இராணுவத் தளம் (Elephant Pass Military Base) என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மூலோபாயமிக்க ஆனையிறவில் அமைந்துள்ள ஒரு இராணுவத் தளம் ஆகும். ஆனையிறவானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுழைவாயிலாகவும், யாழ் குடாநாட்டை முதன்மை நிலப்பரப்புடன் இணைப்பதாகவும் உள்ளது.

போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ஒரு கோட்டை 1760 வரை அவர்கள் வசம் இருந்தது. அது பின்னர் 1776 இல் டச்சுக்கார்களாலும், [1] பின்னர் பிரித்தானியர்களாலும் கைப்பற்றப்பட்டு அவர்களால் புனரமைக்கப்பட்டது. 1948 இல் இலங்கை விடுதலைக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவம் இங்கு ஒரு இராணுவத் தளத்தை உருவாக்கியது. 1980களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீவிரவாத செயற்பாடுகள் கூடியதைத் தொடர்ந்தும், இலங்கை உள்நாட்டுப் போரின்போதும் இத்தளம் விரிவுபடுத்தப்பட்டு, துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 1990 வாக்கில் இது ஒரு முழு பட்டாலியன் ஆதரவு அலகுகளுடன் தானைவைப்பாக ஆக்கப்பட்டது. யூலை மாதத்திற்குள் இலங்கை சின்ஹா படையணியின் 6வது பட்டாலியன் இங்கு நிலைநிறுத்தப்பட்டது. அந்த மாதம் இராணுவத் தளத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்ற முதலாம் ஆனையிறவு படைத்தளத் தாக்குதல் நடந்தது. பாலவேகயா நடவடிக்கை மூலம் முற்றுகை உடைக்கப்படும் வரை தானைவைப்பு நீடித்தது. 2000 ஆம் ஆண்டளவில் இந்த தளம் இலங்கை இராணுவத்தின் 54 டிவிசனின் இருப்பிடமாக இருந்தது. அந்த ஆண்டு இரண்டாவது ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதலின் முடிவில் இலங்கை இராணுவம் தளத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. துருப்புக்கள் பின்வாங்குவதற்கு முன், அதில் உள்ள உள்கட்டமைப்புகள் புலிகளின் கைகளுக்குச் செல்லாமல் தடுக்க, அதன் தகவல் தொடர்பு கோபுரம் உட்படத் தளத்தின் பெரும்பகுதியை அழித்தனர். விடுதலைப் புலிகள் கைப்பற்றியப் பிறகு தளத்தை வலுப்படுத்தினர். 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை இராணுவம் ஆனையிறவை மீண்டும் கைப்பற்றியது (மூன்றாம் ஆனையிறவுச் சமர்). பின்னர் இந்தத் தளம் மீண்டும் நிறுவப்பட்டது. மேலும் 55 வது டிவிசனின் இருப்பிடமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையிறவு_இராணுவத்_தளம்&oldid=3964387" இலிருந்து மீள்விக்கப்பட்டது