ஆனையடிகுத்து அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனையடிகுத்து அருவி
அமைவிடம்இடுக்கி மாவட்டம், கேரளா, இந்தியா

ஆனையடிகுத்து அருவி (Anayadikuthu Waterfalls) என்பது ஆனைச்சாடி குத்து அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தென்மாநிலமான கேரளத்தில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது தொம்மன்குத்து சுற்றுச்சூழல் சுற்றுலா முனைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. பருவமழையின் போது, அருவி உயர்ந்து அதிகபட்சமாக நீருடன் பாய்கிறது. ஆனையடிகுத்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஒரு பிரபலமான குடும்பச் சுற்றுலா இடமாக உள்ளது. கட்டாடிக்கடவு ஆனையடிகுத்து அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.[1]

தொம்மன்குத்து அருவியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கரிமண்ணூர் மற்றும் வண்ணாபுரம் ஊராட்சிகளின் எல்லையில் ஆனையடிகுத்து அருவி அமைந்துள்ளது.[2] பல ஆண்டுகளுக்கு முன், கோடை காலத்தில், உள்காடுகளிலிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக, இந்த அருவிக்கு மேலே உள்ள சமதளமான பாறைக்குத் தண்ணீர் குடித்து வந்ததாக, முன்னோர்கள் கூறுகின்றனர். இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் யானையடிகுத்து என்ற பெயர் வந்ததாகவும், அதில் ஒன்று நீர்வீழ்ச்சியில் விழுந்து இறந்ததாகவும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. கம்பகக்காணம் மற்றும் நெய்குத்தனல் வழியாகப் பாயும் ஓடையின் அடிப்பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது.[3] அருவியின் மேல் மக்கள் நடந்து செல்ல பைஞ்சுதை பாலம் உள்ளது. அருவிக்கு அருகில் குரங்குகள் மற்றும் பல வகையான பறவைகள் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anayadikuthu: A pristine waterfall waiting to be explored". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  2. "മനോഹരം, വന്യം; സഞ്ചാരികളുടെ മനംകവരാൻ തൊമ്മൻകുത്ത്, ആനചാടിക്കുത്ത് വെള്ളച്ചാട്ടങ്ങൾ". Mathrubhumi. 2023-02-22. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  3. "മഴക്കാലത്ത് ദൃശ്യവിരുന്നൊരുക്കി ആനയാടിക്കുത്ത് വെള്ളച്ചാട്ടം". www.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையடிகுத்து_அருவி&oldid=3845571" இலிருந்து மீள்விக்கப்பட்டது