ஆனேகல்

ஆள்கூறுகள்: 12°42′N 77°42′E / 12.7°N 77.7°E / 12.7; 77.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனேகல்
புறநகர்
ஆனேகல் is located in கருநாடகம்
ஆனேகல்
ஆனேகல்
கர்நாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°42′N 77°42′E / 12.7°N 77.7°E / 12.7; 77.7
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
ஏற்றம்915 m (3,002 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்44,260
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்562106
தொலைபேசி குறியீடு91-80
வாகனப் பதிவுKA 51 மற்றும் KA 59
இணையதளம்www.anekaltown.mrc.gov.in

ஆனேகல் (Anekal) என்பது பெங்களூரு நகர மாவட்டத்தின் ஒரு முக்கிய நகரம் மற்றும் வட்டத் தலைநகரம் ஆகும். இது பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். ஆனேகல் தோராயமாக பெங்களூரு மையத்திலிருந்து 36 கிமீ தொலைவிலும், ஓசூர் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பெங்களூரின் சில்க் போர்டில் இருந்து ஆனேக்கல் வரையிலான விரைவுச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில செடுஞ்சாலை வழியாக செல்கிறது. இதனால் ஆனேகல் சிறந்த அணுக்ககத்தைக் கொண்டுள்ளது. இந்த நகரம் பெங்களூர் பெருநகரப் பகுதியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆனேகல் கரகம் மற்றும் தசரா விழாக்களுக்கு பெயர் பெற்றது.

இன்ஃபோசிஸ், பயோகான், விப்ரோ, எச்.சி.எல், டி.சி.எஸ், எக்சன்சா போன்ற முதன்மையான பெரு நிறுவனங்கள் அனைத்தும் ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளன.

2011 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் தொகை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

நிலவியல்[தொகு]

ஆனேக்கல் 12°42′N 77°42′E / 12.7°N 77.7°E / 12.7; 77.7.[1] இல் அமைந்துள்ளது. இது சராசரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 915 மீட்டர் (3001 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

கம்பட விநாயகர் கோவில்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] ஆனேக்கல் மக்கள் தொகையானது 44,260 ஆகும். இதில் ஆண்கள் 52 விழுக்காடு, பெண்கள் 48 விழுக்காடும் உள்ளனர். ஆனேகல்லின் அதிகாரப்பூர்வ மொழியும், பரவலாக பேசப்படும் மொழியிம் கன்னடம் ஆகும். ஆனேகல்லின் சராசரி கல்வியறிவு விகிதம் 67 விழுக்காடாக உள்ளது. இது தேசிய சராசரியான 59.5 விழுக்கட்டை விட கூடுதலாகும். ஆனேகல்லின் மக்களில் 56 விழுக்காடு ஆண்களும் 44 விழுக்காடு பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர் 6 வயதுக்குட்பட்டவர்கள். கன்னடத்தில் ஆனேகல் என்றால் 'யானைப் பாறை' என்று பொருளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனேகல்&oldid=3746035" இருந்து மீள்விக்கப்பட்டது