உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்தன் குணசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தன் குணசேகரன்
Anandan Gunasekaran
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்ஆனந்தன் குணசேகரன்
தேசியம்இந்தியர்
பிறப்பு18 மார்ச்சு 1987 (1987-03-18) (அகவை 37)
கும்பகோணம், தமிழ்நாடு இந்தியா
உயரம்177 செ.மீ
எடை69 கி.கி
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)100 மீ ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400மீ
தொழில்முறையானது2014
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் தடகளம்
நாடு இந்தியா
இராணுவ உலக விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் இராணுவ உலக விளையாட்டுப் போட்டிகள் 100மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் இராணுவ உலக விளையாட்டுப் போட்டிகள் 200மீ]]
தங்கப் பதக்கம் – முதலிடம் இராணுவ உலக விளையாட்டுப் போட்டிகள் 400மீ]]
தேசிய பாரா தடகள வெற்றியாளர் போட்டிகள் 2018[1]
தங்கப் பதக்கம் – முதலிடம் பஞ்ச்குலா 200 மீட்டர் ஓட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் பஞ்ச்குலா 400மீ
உலக பாரா கிராண்டு பிரிக்சு 2017[2]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் துபாய் 400மீ

ஆனந்தன் குணசேகரன் (Anandan Gunasekaran) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1967 ஆண்டு மார்ச் 18 ஆம் நாளன்று இவர் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரத்தில் பிறந்தார். பாரா-தடகள ஓட்டப்பந்தய வீரரான இவர் டி64 பிரிவில் ஆடவர் 100மீ, 200மீ மற்றும் 400மீ போட்டிகளில் பங்கேற்கிறார்.[3][4][5][6] பல பன்னாட்டு போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு அக்டோபர மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.[3] சீனாவின் ஊகான் நகரத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ உலக விளையாட்டு போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற நாட்டின் முதல் தடகள வீரர் என்று ஆனந்தன் குணசேகரன் அறியப்படுகிறார்.[3][7]

மேஏற்கோள்கள்

[தொகு]
  1. Codingest. "Results - Paralympic Committee of India". paralympicindia.org.in.
  2. "Army's Anandan Gunasekaran Wins 400m World Para GP Silver". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. 3.0 3.1 3.2 Prasad, G. (2020-05-14). "Gutsy Anandan eyes Tokyo Paralympics" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/athletics/gutsy-anandan-eyes-tokyo-paralympics/article31585802.ece. 
  4. Dutt, Tushar. "Army's Anandan Gunasekaran Wins 400m World Para GP Silver | More sports News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-22.
  5. Rao, Mohit M. (12 October 2015). "Lance Naik Anandan returns with rich haul". தி இந்து.
  6. Mathews, Moni. "Gunasekaran, Karan scorch tracks on wet, cold day". Khaleej Times.
  7. Judge, Shahid (2019-10-30). "After losing leg at LoC, blade runner toasts second life – with triple gold". இந்தியன் எக்சுபிரசு (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தன்_குணசேகரன்&oldid=3920466" இலிருந்து மீள்விக்கப்பட்டது