உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்ட்ரோஸ்

ஆள்கூறுகள்: 37°50′11″N 24°53′53″E / 37.83639°N 24.89806°E / 37.83639; 24.89806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்ட்ரோஸ்
Περιφερειακή ενότητα / Δήμος
Άνδρου
பிராந்திய அலகு
ஆண்ட்ரோஸ் நகரம்
ஆண்ட்ரோஸ் நகரம்
தெற்கு ஏஜியனில் ஆண்ட்ரோசின் அமைவிடம்
தெற்கு ஏஜியனில் ஆண்ட்ரோசின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°50′11″N 24°53′53″E / 37.83639°N 24.89806°E / 37.83639; 24.89806
நாடுகிரேக்கம்
பிராந்தியம்தெற்கு ஏஜியன்
தலைநகரம்ஆண்ட்ரோஸ் (நகரம்)
பரப்பளவு
 • மொத்தம்380 km2 (150 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,221
 • அடர்த்தி24/km2 (63/sq mi)
நேர வலயம்ஒசநே+2
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
845 xx
தொலைபேசிக் குறியீடு22820
வாகனப் பதிவுக் குறியீடுEM
இணையதளம்www.androsweb.gr

ஆண்ட்ரோஸ் (Andros, கிரேக்கம்: Άνδρος‎ ) என்பது கிரேக்க சைக்லேட்ஸ் தீவுக்கூட்டத்தின் வடக்கே உள்ள தீவு ஆகும். இது யூபோயாவிற்கு தென்கிழக்கே சுமார் 10 கிமீ (6 மைல்) மற்றும் டினோசுக்கு வடக்கே சுமார் 3 கிமீ (2 மைல்) தொலைவில் உள்ளது. இது கிட்டத்தட்ட 40 கிமீ (25 மைல்) நீளம் கொண்டது, மேலும் இதன் அதிகப்பட்ச அகலம் 16 கிமீ (10 மைல்) ஆகும். இதன் பெரும்பகுதி மலைப்பாங்கானது, பல பழங்கள் விளையக்கூடிய, நன்கு நீர் பாசணம் வசதி கொண்ட பள்ளத்தாக்குகள் கொண்டது. [1] ஆண்ட்ரோஸ் தீவு மற்றும் பல மக்கள் வசிக்காத சிறிய தீவுகளை உள்ளடக்கிய நகராட்சியானது, 380 km2 (146.719 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] இதில் பெரிய நகரங்கள் ஆண்ட்ரோஸ் (நகரம்), கவ்ரியோ, பாட்ஸி மற்றும் ஓர்மோஸ் கோர்தியோ ஆகும்.

தீவின் பழங்காலத் தலைநகரான பேலியோபோலிஸ், செங்குத்தான மலைப்பகுதியில் கட்டப்பட்டது. மேலும் இதன் துறைமுகமான பிரேக்வாட்டர் இன்னும் நீருக்கடியில் காணப்படுகிறது. அபோகியா கிராமத்தில், சாரிசாவின் குறிப்பிடத்தக்க நீரூற்று உள்ளது, அங்கு கல்லால் செதுக்கப்பட்ட சிங்கத்தின் தலையிலிருந்து தண்ணீர் பாய்கிறது.

நிர்வாகம்

[தொகு]

ஆண்ட்ரோஸ் என்பது தெற்கு ஏஜியன் பிராந்தியத்தின் ஒரு தனி பிராந்திய அலகு ஆகும். இந்த பிராந்திய அலகின் ஒரே நகராட்சியாக ஆண்ரோஸ் உள்ளது. 2011 கல்லிக்ராடிஸ் அரசாங்க சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, முன்னாள் சைக்லேட்ஸ் பிரிஃபெக்சரின் ஒரு பகுதியிலிருந்து பிரித்து புதிய பிராந்திய அலகாக ஆண்ட்ரோஸ் உருவாக்கப்பட்டது. அதே சீர்திருத்தத்தின்படி, 3 முன்னாள் நகராட்சிகளில் இருந்து தற்போதைய ஆண்ட்ரோஸ் நகராட்சி உருவாக்கப்பட்டது:[3]

  • ஆண்ட்ரோஸ் (நகரம்)
  • கோர்தியோ
  • யட்ரூசா

மாகாணம்

[தொகு]
பட்சி கிராமம்

ஆண்ட்ரோஸ் மாகாணம் ( கிரேக்கம்: Επαρχία Άνδρου‎ ) சைக்லேட்ஸ் மாகாணத்தின் மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. அதன் பிரதேசம் தற்போதைய பிராந்திய அலகான ஆண்ட்ரோசுடன் ஒத்திருந்தது.[4] அது 2006 இல் ஒழிக்கப்பட்டது.

மக்கள் தொகை

[தொகு]

கிழக்கு கடற்கரையில் உள்ள தலைநகரான ஆண்ட்ரோஸ் 1900 இல் சுமார் 2,000 மக்களைக் கொண்டிருந்தது. தீவில் (1900) சுமார் 18,000 மக்கள் இருந்தனர். 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 8,781 ஆக இருந்தது. 2011 இன் அண்மைய கிரேக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்ட்ரோஸ் நகரம் 1,665 மக்களைக் கொண்டுள்ளது, மேலும் தீவின் மொத்த மக்கள் தொகை 9,221 ஆகும். இந்த தீவு ஆண்ட்ரோஸ் (நகரம்) (ம.தொ. 3,901), கோர்தியோ (ம.தொ. 1,948), மற்றும் யட்ரூசா (ம.தொ. 3,372) ஆகிய நகராட்சி அலகுகளால் ஆனது. ஆண்ட்ரோசின் வடக்கில் ஒரு சிறிய இனக்குழுவான அர்வானைட் சமூகம் உள்ளது.[5]

குறிப்புகள்

[தொகு]
  1. Chisholm 1911.
  2. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 2015-09-21.
  3. "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette.
  4. "Detailed census results 1991" (PDF). Archived from the original (PDF) on March 3, 2016.  (39 MB)
  5. Jochalas, Titos P. (1971): Über die Einwanderung der Albaner in Griechenland: Eine zusammenfassene Betrachtung ["On the immigration of Albanians to Greece: A summary"]. München: Trofenik.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரோஸ்&oldid=3476530" இலிருந்து மீள்விக்கப்பட்டது