ஆண்ட்ரூ காலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்ட்ரூ சான் தியோடர் காலின் (Andrew John Theodore Colin, பிறப்பு: 1936) பிரிட்டிசு பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையின் பேராசிரியராக பணியாற்றினார். இவர் பரவலாகப் பயன்படுத்தப்படும் பைனரி மர தரவு கட்டமைப்பின் இணை கண்டுபிடிப்பாளர் ஆவார்.[1] பேராசிரியர் காலின் கணினி அறிவியலின் பல்வேறு அம்சங்களில் 12 பாடப்புத்தகங்களை வெளியிட்டார். அவற்றில் சில பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ரூ காலின் 1957 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை இலண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியில் விரிவுரை செய்தார். 1960 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் நிறுவனத்திற்குச் சென்றார். 1965 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை லான்காசுடர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார். 1970 ஆம் ஆண்டு ச்ட்ராத்க்லைடு பல்கலைக்கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[2] 1983 ஆம் ஆண்டு துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து கற்பித்தல் துறையின் ஆராய்ச்சியின் அடிப்படையில் வணிக பயன்பாடுகளை உருவாக்கும் பணியை மேற்கொள்ள புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, ச்ட்ராத்க்லைடு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பட்டதாரி ஆசிரியராக விரிவுரையாற்றினார். கிளாசுகோவில் உள்ள செயின்ட் மேரிசு கதீட்ரலின் பாடகர் குழுவிலும் பாசு இசையில் பாடினார்.

2018 செப்டம்பர் 25 இல் தனது 82-ஆவது அகவையில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. University of Glasgow Staff page
  2. Colin, Andrew J. T, 1980, Fundamentals of Computer Science, back cover. Macmillan Publishers
  3. Andrew John Theodore Colin
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூ_காலின்&oldid=3858210" இலிருந்து மீள்விக்கப்பட்டது