பாடநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Text Book 01.JPG

பாடநூல் (Text book) என்பது கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்காக பயிற்றுவிக்கப்படும் பாடப்பொருள் குறித்து அச்சடித்த நூலைக் குறிக்கும்.பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்ட வடிவில் வெளியிடப்பட்ட போதிலும், பல நூல்கள் இப்போது இணையத்தில் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தகவல்களை அறிந்துகொள்ளவும் வழிமுறைகளை அறிந்துகொள்ளவும் மக்கள் பாடநூல்களைப் பயன்படுத்தினர். சில பாடநூல்கள் வாசிப்பவர்களின் அறிவையும் விளங்கியுள்ளனரா என்றும் சோதிப்பதற்காக கேள்விகளை உடையதாவும் காணப்படுகின்றன.

பயிற்சி நூல் (workbook) என்பது பாடநூலின் ஒருவகையாகும். எனினும் இதில் பயிற்சி செய்வதற்கான சில பயிற்சிகளும் கேள்விகளுமே உள்ளன. பயிற்சி நூல்கள் கற்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல எனினும் அவை முக்கியமான சில பகுதிகளை பயிற்சி செய்யவும் மேலதிக பயிற்சியை அளிக்கவும் பெரிதும் உதவுகின்றன. மீள்-பார்வை வழிகாட்டியும் (revision guide) ஒருவகை பாட நூல் ஆகும். அது கற்பவர்களுக்கு பாடத்தைப் பற்றி மீள் ஞாபகமளிப்பதாகவும் மேலதிக பயிற்சியை அளிப்பதாகவும் அமைகின்றது, குறிப்பாக இது பரீட்சைக்கு முன்னாயத்தம் செய்ய இகவும் உதவுகின்றது.

கற்பிக்கவும் கற்கவும் துணையாகப் பாட நூல்கள் அமைவதால் அவை பாடசாலையால் அல்லது அரசாங்கத்தால் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்களிலும் இது சாத்தியப்படும் எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் பாட நூல்களை தாமாகவே பணம் கொடுத்து வாங்க அல்லது நூலகத்தில் இரவல் வாங்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடநூல்&oldid=3171211" இருந்து மீள்விக்கப்பட்டது