ஆண்ட்ராய்டு எக்லேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்ட்ராய்டு எக்லேர்
Nexus one home screen 21
நிறுவனம்/
விருத்தியாளர்
கூகிள்
முதல் வெளியீடு அக்டோபர் 26, 2009; 14 ஆண்டுகள் முன்னர் (2009-10-26)
இணையத்தளம் developer.android.com/about/versions/android-2.0-highlights.html

ஆண்ட்ராய்டு "எக்லேர்" (Android "Eclair") என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஐந்தாவது ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆகும்.இது அக்டோபர் 26, 2009இல் வெளியானது. ஆண்ட்ராய்டு 2.1 ஆனது ஆண்ட்ராய்ட் 1.6 "டோனட்" இல் இருந்த பல குறைகளை களைந்துள்ளது.[1]

அம்சங்கள்[தொகு]

பயனர் அம்சங்கள்[தொகு]

முகப்பு திரையில் கூகிள் தேடல் பட்டையைக் காண்பிக்கும் சேண்மை பெரிதாக்கம் காட்சி முறை, வெள்ளை சமநிலை, வண்ண விளைவு மற்றும் உள்ளிட்ட பல புதிய புகைப்பட அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. புகைப்பட தொகுப்பு பயன்பாட்டில் அடிப்படை புகைப்பட செப்பனிடும் கருவிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பேச்சுணரி அறிமுகப்படுத்தப்பட்டது. இது கமா எனும் விசைக்குப் பதிலாக மாற்றப்பட்டது.[2]

மேடை[தொகு]

குறுஞ்செய்திகளை தேடி கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. கூகிள் மேப்ஸ், மின்னஞ்சல் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டன.[3][4] மெய்நிகர் விசைப்பலகையின் மூலமாக வேகமான தட்டச்சு வசதியினையும் இது பக்கக் குறி போன்ற வசதிகளை வழங்குகிறது. மேலும் நாட்காட்டி, அனுகல் போன்ற வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. இணைய உலாவலுக்காக, மீயுரைக் குறியிடு மொழி 5, உலாவியை புதுப்பிப்பு செய்தல், உருவ அளவு மாற்றம் செய்தல், போன்ற வசதிகள் உள்ளன.[5]

இவற்றையும் காண்க[தொகு]

ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ராய்டு_எக்லேர்&oldid=3542499" இருந்து மீள்விக்கப்பட்டது