பக்கக் குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூகுள் குரோமில் பக்கக் குறிகள்

பக்கக் குறி (Bookmark) என்பது கணினியில் சேமிக்கப்பட்டுள்ள சமச்சீர் வள இனங்காட்டியாகும். பெரும்பாலான நவீன வலை மேலோடிகள் பக்கக் குறி வசதிகளைக் கொண்டுள்ளன.

தேக்குதல்[தொகு]

பக்கக் குறிகளின் பட்டியலை முகாமிப்பதற்கு ஒவ்வொரு வலை மேலோடியும் அதற்கான கருவியைக் கொண்டுள்ளது. பக்கக் குறிகளின் பட்டியலைத் தேக்கி வைக்கும் முறையானது வலை மேலோடி, அதன் பதிப்பு, இயங்குதளம் என்பவற்றுக்கேற்ப வேறுபடும்.

நெட்சுக்கேப்பிலிருந்து பெறுவிக்கப்பட்ட மேலோடிகள் பக்கக் குறிகளை Bookmarks.htm என்ற மீப்பாடக் குறிமொழிக் கோப்பாகச் சேமித்து வைத்திருக்கும்.[1]

குறிநிரல்கள்[தொகு]

பக்கக் குறிகளாகச் சேமிக்கப்பட்ட யாவாசிக்கிரிப்டு செய்நிரல்கள் குறிநிரல்கள் எனப்படும்.[2] குறிநிரல் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Bookmarklet என்பது Bookmark, Applet ஆகிய சொற்களை இணைத்துப் பெறப்பட்டது. Bookmarklet என்ற சொல் முதன்முதலாக இசுட்டீவு கங்கசால் பயன்படுத்தப்பட்டது.

நிகழ்நிலைப் பக்கக் குறி[தொகு]

இணையப் பக்கக் குறிகள் நிகழ்நிலைப் பக்கக் குறிகள் என அழைக்கப்படும். மொசில்லா பயர்பாக்சு மேலோடியில் நிகழ்நிலைப் பக்கக் குறிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கக்_குறி&oldid=3437782" இருந்து மீள்விக்கப்பட்டது