ஆடவர் பயில்வுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடவர் பயில்வுகள் (Men's studies) என்பது பலதுறைசார் கல்விப் புலமாகும். இப்பயில்வில் ஆண்கள், ஆண்மை, பாலினம், பண்பாடு, அரசியல், மாந்தப் பாலுணர்வு ஆகிய பிரிவுகள் அடங்கும் இப்புலம் அடிப்படையில் தற்காலச் சமூகத்தில் ஆண் எனும் கருத்தினத்தின் பொருளைக் கல்வியியலாக ஆய்கிறது.[1]

தோற்றம்[தொகு]

நார்வே நாட்டு சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் ஆகிய எர்க் குருரோன்சேத்தும் பெர் ஓலவ் தில்லரும் ஆராய்ச்சிப் புலமாக முதன்முதலில் ஆடவர் பயில்வுகள் புலத்தினை எடுத்து ஆய்வு மேற்கொண்ட முன்னோடிகள் ஆவர்; கடலோடிகளின் குடும்பங்களில் தந்தையர் இல்லாமையால் குழந்தைகளின் ஆளுமையில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிய குருரோன்சேத்தும் பெர் ஓலவ் தில்லரும் 1950 களில் மேற்கொண்ட ஆய்வே ஆடவர் பயில்வுகள் புலம் நார்வே போன்ற நார்த்திக நாடுகளில் தோன்ற வித்திட்டது எனலாம் .[2]

ஆங்கிலம் பேசிய நாடுகளில் ஆடவர் உரிமை இயக்கத்துக்கான எதிர்வினையாகவே ஆடவர் பயில்வுகள் புலம் 1970 களில் உருவாகிக் கல்வியில் இடம்பிடித்தது எனலாம்.[3]

ஆணிய உளவியல் புலத்துக்கு மாறாக, ஆடவர் பயில்வுகள் திட்டமும் பாடத்திட்டமும் ஆடவர் உரிமைகள், பெண்ணியக் கோட்பாடு, விதிர்நிலைக் கோட்பாடு, தாய்வழி முறைமை, தந்தைவழி முறைமை ஆகியவற்றையும் மிகப்பொதுவான ஆண் பற்றிய புனைவுகளின் சமூக, வரலாற்று,பண்பாட்டு, அரசியல் தாக்கங்களையும் பேசின. இவை ஆண் முன்னுரிமைகளை நுட்பமாகவும் தற்காலத்தில் வழக்கிழந்துவரும் வடிவங்களை மறைமுகமாக ஆதரித்தும் பேசலாயின.[சான்று தேவை]

தலைப்புகள்[தொகு]

ஆண்மை[தொகு]

மிக முந்தைய ஆடவர் பயில்வுகள் புலம் சமூகப் புனைவான ஆண்மையைப் பற்றி ஆய்வு செய்தது;[4] இவ்வகையில் மிகவும் பெயர்பெற்றவர் ஆத்திரேலிய சமூகவிலாளரான இரேவின் கானல் ஆவார்.

  • மேலும் காண்க:
  • Doyle, James. A; Femiano, Sam (1999). "The early history of the American Men's Studies Association and the evolution of men's studies". mensstudies.org. American Men's Studies Association (AMSA). Archived from the original on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.

</ref>

மேலும் காண்க[தொகு]

மேலும்படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bennett, Jessica (August 8, 2015). "A master's degree in...masculinity?". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2015/08/09/fashion/masculinities-studies-stonybrook-michael-kimmel.html?_r=0. 
  2. "Mannsforskning". Store norske leksikon. (2018). 
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Brod, Harry (1987). The making of masculinities : the new men's studies. Allen & Unwin, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781138828339. இணையக் கணினி நூலக மைய எண் 951132208.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடவர்_பயில்வுகள்&oldid=2938168" இலிருந்து மீள்விக்கப்பட்டது