ஆச்சார்யா பிரமோத் கிருட்டிணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆச்சார்யா பிரமோத் கிருட்டிணம் (Acharya Pramod Krishnam) (சனவரி 4, 1965) இவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பீகாரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.[1]

பிறப்பு4 சனவரி 1965 (1965-01-04) (அகவை 59)
பீகார்
தேசியம்இந்தியர்

கிருட்டிணம் சம்பலில் சிறீ கல்கி அறக்கட்டளையை நிறுவியவர். காங்கிரசில் இணைந்து 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் சம்பல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் லக்னோவில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.காங்கிரசு கட்சியின் உத்தரப் பிரதேச ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். இந்த ஆலோசனைக் குழுவானது உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி ராபர்ட் வதேரா காங்கிரசு பொறுப்பாளராக இயங்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who is Acharya Pramod Krishnam, expelled by Congress for 'indiscipline'", The Indian Express (in ஆங்கிலம்), 2024-02-11, பார்க்கப்பட்ட நாள் 2024-05-09
  2. PTI (2024-02-10), "Congress expels Acharya Pramod Krishnam for 'indiscipline', making statements against party", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-05-09