உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசை ஆசையாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசை ஆசையாய்
இயக்கம்ரவிமரியா
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைரவி மரியா
இசைமணிசர்மா
நடிப்புஜீவா
ஷர்மி, நாசர் , விஜயகுமார் , ரமேஷ்கண்ணா , யுவராணி , ஸ்ரீவித்யா
வெளியீடு2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆசை ஆசையாய் (Aasai Aasaiyai) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

வகை

[தொகு]

காதல்படம் / குடும்பப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பிருந்தா ஷர்மி எவரையேனும் காதலிக்கின்றாரா என பிருந்தாவின் உறவினரால் கண்காணிப்பிற்காக வினோத் ஜீவா பணியமர்த்தப்படுகின்றார்.பின்னர் பிருந்தாவின் குணாதிசயங்களைப்பார்த்து வினோத் பிருந்தா மீது காதல் கொள்கின்றார்.பிருந்தாவிடம் தன் காதலைச் சொல்வதற்காக தபால்காரராகப் பணியினை ஏற்றுக்கொண்டு வெற்றுக் காகிதத்தினை வைத்து பிருந்தாவிடம் ஒவ்வொருமுறையும் தருகின்றார் வினோத் மேலும் யாரோ பிருந்தாவைக் காதலிக்கின்றான் எனவும் அவனே இவ்வாறு வெற்றுக்கடிதங்களினை அனுப்புகின்றான் எனவும் பொய் கூறுகின்றார்.ஆனாலும் வினோத் தன்னைக் காதலிப்பதைப் புரிந்து கொள்கின்றார் பிருந்தா.பின்னர் தனது சகோதரியின் காதலித்தவருடன் ஓடிச்சென்ற காரணத்தினால் சகோதரியினை தலைமுழுகிய தந்தையின் நாசர் முன்கோபத்தின் காரணமாக பிருந்தாவும் வினோத்தும் கல்வியில் கவன்ம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேறும்வரை பிரிந்தே வாழ சத்தியம் பண்ணுகின்றனர்.அதன்படியே இருவரும் வாழ்க்கையில் முன்னிலையில் வருகின்றனர் அதே சமயம் பிருந்தாவிற்கு மணம் முடித்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்தேறியது.அச்சமயம் பிருந்தாவைக் கண்காணிக்கச் சொன்ன அவர் உறவினரால் பிருந்தா வினோத்தைக் காதலிப்பதென்ற உண்மை தெரியவருகின்றது மேலும் இவர்கள் எடுத்துக்கொண்ட இலட்சியப்பயணத்தினை அறிந்து வியக்கும் பிருந்தாவின் தந்தையும் வினோத்தினை தனது மருமகனாக ஏற்றுக்கொள்கின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_ஆசையாய்&oldid=3423050" இலிருந்து மீள்விக்கப்பட்டது