ஆசர் பேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஷர் பேர்
இயற்பெயர்אשר בער
பிறப்பு19 ஆம் நூற்றாண்டின் துவக்கம்
செயினி, சுவால்கி பகுதி
இறப்பு1897
ஜெருசலேம், உதுமானியப் பேரரசு

ஆசர் பேயர் (Asher Baer; எபிரேயம்: אשר בער‎; 19 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதி, செயினி – 1897, எருசலேம்) என்பவர் உருசிய-யூதக் கணிதவியலாளரும், கைவினைஞருமாவார்.

இவர்  கணிதத்திலும், சிறப்பாக இயக்கவியலிலும் பல முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தார். ஒரே விசையைக் கொண்டு, இரண்டு சம பற்சக்கரங்கள் ஒன்றுடன் ஒன்று இறுக நன்றாகப் பொருந்தி இரண்டு வெவ்வேறு இயக்கங்களை ஏற்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்.[1] 1858 ஆம் ஆண்டில் கோனிங்ஸ்பெர்க் கண்காட்சியில் இவரால் செதுக்கப்பட்ட மரத்திற்கு பரிசளிக்கப்பட்டது. [2]

அக் காலகட்டத்தில் இவருடைய பல‌ மதிப்பு மிக்க கண்டுபிடிப்புகளை செருமானிய இதழ்கள் கட்டுரைகளாக வெளியிட்டன. ஓசிப் ராபினோவிச், ஓ வோல் போன்றோர் உருசிய-யூத வார இதழ்களான ராத்சுவியத், ஹ கார்மெல் ஆகியவற்றில் இவரது சிறந்த திறமைகளை வெளியிட்டனர்.[3][4] 1860 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவர் எருசலேம் சென்றார். அங்கு ஹா மேகிட் போன்ற சில எபிரேய இதழ்களுக்கு பல ஆண்டுகளாக எழுதியுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Königsberger Zeitung, no. 8. 11 January 1856.
  2. Journal of the Politechnische Gesellschaft zu Königsberg, p. 41. 9 October 1858.
  3. Russian supplement to Ha-Karmel, no 37. 1860.
  4. Wilenski Vyestnik, no. 29. 1861.
  5.   "Baer, Asher". Jewish Encyclopedia. (1901–1906). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசர்_பேயர்&oldid=3804960" இலிருந்து மீள்விக்கப்பட்டது