உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசம் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசம் சா
Azam Jah
Azam Jah in 1937
பிறப்பு(1907-02-22)22 பெப்ரவரி 1907
ஐதராபாத்து (இந்தியா), ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்கால தெலங்காணா, இந்தியா)
இறப்பு7 அக்டோபர் 1970(1970-10-07) (அகவை 63)
துணைவர்
பெயர்கள்
சாகேப்சாதா மிர் இமாயத் அலி கான் சித்திக் ஆசம் சா
தந்தைஓசுமான் அலி கான்
தாய்சாகேப்சாதி அசமுன்னிசா பேகம் (துல்கான் பாட்சா பேகம்)[1]

சாகேப்சாதா மிர் இமாயத் அலி கான் சித்திக் ஆசம் சா (Sahebzada Mir Himayat Ali Khan Siddiqi Azam Jah) (22 பிப்ரவரி 1907 - 9 அக்டோபர் 1970) ஐதராபாத் இராச்சியத்தின் கடைசி நிசாம் ஓசுமான் அலி கான் மற்றும் அவரது மனைவி ஆசம் உன்னிசா பேகம் ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

1936 ஆம் ஆண்டில், இவருக்கு பேரரின் இளவரசர் என்ற பட்ட்டம் வழங்கப்பட்டது. ஐதராபாத் இராச்சியத்தின் வடக்கில் இருந்த மாகாணம் ஆகும். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு நிரந்தரமாக குத்தகைக்கு விடப்பட்டு அவர்களால் நிர்வகிக்கப்பட்டது.[2]

1931 ஆம் ஆண்டில் ஆசம் சா, ஓசுமான் இல்லத்தின் உறுப்பினரும் (முன்னர் உதுமானியப் பேரரசு), கடைசி உதுமானிய கலீபாவான இவர், உதுமானிய கலீபகத்தின் கடைசி கலீபா இரண்டாம் அப்துல்மசித்தின் ஒரே மகளான துருசேவர் சுல்தானை 1932 நவம்பர் 12 அன்று நீஸ் நகரில் மணந்தார். [3][4][5] [6] திருமணத்திற்கு பல்வேறு இந்திய இளவரசர்ளும் வந்திருந்தனர்.[3] [6] [7]இரண்டு மகன்களைப் பெற்ற பிறகு 1954 ஆம் ஆண்டில் தம்பதியினர் மணமுறிவு பெற்றனர்.

இவர் ஐதராபாத்தில் உள்ள உசேன் சாகர் அருகேயுள்ள பெல்லா விஸ்டா என்ற 10 ஏக்கர் (40,000 சதுர மீட்டர்) பரப்பளவில் உள்ள அரண்மனையில்[8][9] வசித்து வந்தார்.  

தொண்டுப் பணிகள்

[தொகு]
இளவரசன் ஆசம் சா பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

இலண்டன் மத்திய மசூதி என்று இப்போது அழைக்கப்படும் நிசாமியா பள்ளிவாசலுக்கு ஆசப் சா நன்கொடை அளித்தார். ஜூன் 4,1937 வெள்ளிக்கிழமை அடிக்கல் சூட்டப்பட்டது.[10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hyderabad பரணிடப்பட்டது 23 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம், Indian Princely States website, accessed 2 July 2010
  2. Haidar, Navina Najat; Sardar, Marika (13 April 2015). Sultans of Deccan India, 1500–1700: Opulence and Fantasy (in ஆங்கிலம்). Metropolitan Museum of Art. p. 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-21110-8.
  3. 3.0 3.1 Bardakçı 2017, ப. 123.
  4. Bardakçı 2017, ப. 124.
  5. Bardakçı 2017, ப. 125.
  6. 6.0 6.1 Bardakçı 2017, ப. 126.
  7. Bardakçı 2017, ப. 126–127.
  8. "The Prince and The Palace". தி இந்து. 2004-02-25 இம் மூலத்தில் இருந்து 30 May 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040530154223/http://www.hindu.com/mp/2004/02/25/stories/2004022500270300.htm. 
  9. "Deen Dayal's eyes capture bygone era". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 4 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111204145348/http://articles.timesofindia.indiatimes.com/2006-04-26/hyderabad/27818880_1_exhibition-salar-jung-museum-hyderabad. 
  10. "Laying of foundation stone of London Nizamia Mosque, June 1937". wokingmuslim.org.
  11. "Crescent obscured: Indian Muslims in Britain". twocircles.in. Archived from the original on 23 March 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசம்_சா&oldid=4142554" இலிருந்து மீள்விக்கப்பட்டது