ஆசப் ஆல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசப் ஆல்
Asaph Hall
1899 இல் ஆசப் ஆல், USNO தொலைநோக்கி
பிறப்பு(1829-10-15)அக்டோபர் 15, 1829
கோசென், கனெடிகட்
இறப்புநவம்பர் 22, 1907(1907-11-22) (அகவை 78)
அன்னாபோலிசு, மேரிலாந்து
இருப்பிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் நடுவண் கல்லூரி, மெக்கிராவில்லி
அறியப்படுவதுஇரு செவ்வாய் நிலாக்களின் கண்டுபிடிப்பு
பெற்றோர்இரண்டாம் ஆசப் ஆல்
கன்னா பால்மர்

மூன்றாம் ஆசப் ஆல் (Asaph Hall III, அக்தோபர் 15, 1829 – நவம்பர் 22, 1907) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் செவ்வாய் நிலாக்களாகிய தெய்மோசையும் போபோசையும் கண்டுபிடித்து பெயர்பெற்றவர். இவர் இவற்றை 1977 இல் கண்டுபிடித்தார்.[1] இவர் செவ்வாயின் பொருண்மையையும் காரிக்கோளின் சுழற்சியையும் பிற கோள்களின் துணைக்கோள்கள், இரட்டை விண்மீன்கள் ஆகியவற்றின் வட்டணைகளையும் தீர்மானித்தார்.

வாழ்க்கை[தொகு]

ஆல் கன்னெக்டிகட்டில் உள்ள கோழ்செனில் பிறந்தார். இவரது தந்தையார் இரண்டாம் ஆசப் ஆல் (1800-42) ஆவார். இவர் கடிகாரம் செய்வதில் வல்லவர். இவரது தாயார் கன்னா பால்மர் . (1804–80) ஆவார். இவரது பெற்றோரின் தாத்தா முதல் ஆசப் ஆல் (ஜூன் 11, 1735 – மார்ச்சு 29, 1800) ஒரு ப்ரட்சிப் போர் அலுவலரும் கன்னெக்டிகட் சட்டமன்ர உறுப்பினரும் ஆவார்.[2][3] இவரின் தந்தை இவரது 13 ஆம் அகவையிலேயே குடும்பத்தை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டு இறந்துள்ளார்.எனவே இவர் தன்16 ஆம் அகவையில் பள்ளியில் இருந்து நின்றுவிட்டார்.ஒருதச்சரிடம் பயிற்சியில் சேர்ந்துள்ளார். இவர் பிறகு நியூயார்க்கில் உள்ள மெக்கிராவில்லி நகரின் நியூயார்க் நடுவண் கல்லூரியில் கணிதவியல் பயில சேர்ந்தார். அங்கே இவர் ஆஞ்சலின் சுடிக்னியிடம் செருமன் மொழியும் வடிவியலும் கற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் 1856 இல் திருமணம் புரிந்துகொண்டனர். ஆல் 1856 இல் மசாசூசட் கேம்பிரிட்ஜில் உள்ள ஆர்வார்டு வான்காணகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கே வாட்டணைகளைக் கணக்கிடுவதில் வல்லவர் ஆனார். இவர் 1862 இல் வாழ்சிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்கக் கடற்படை வான்கானகத்தில் உதவி வானியலாளர் ஆனார். அங்கே ஒராண்டிற்குள் பெராசிரியர் ஆனார்.

ஆல் 1875 இல் USNO 26-அங். (66-செமீ) தொலைநோக்கியின் பொறுப்பு தரப்பட்டது. அப்போது இது உலகிலேயே மிகப்பெரிய ஒளித்தெறிப்பு வகைத் தொலைநோக்கியாகும். இந்த்த் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இவர் 1877 ஆகத்தில் செவ்வாயின் நிலாக்களான போபோசையும் தெய்மோசையும் கண்டுபிடித்தார். இவர் காரிக்கோளில் ஒரு வெண்பொட்டைக் கண்டார். இதை வைத்து இவர் அக்கோளின் சுழற்சி அலைவுநேரத்தைக் கண்டுபிடித்தார். ஆல் 1884 இல் காரியின் நிலாவாகிய கைப்பெரியானின் வட்டணை நீள்வட்ட வடிவம் கொண்டது எனக் காட்டினார் அதன் இயக்கம் ஓராண்டுக்கு 20° அளவுக்குப் பிந்தேகும் தன்மையில் நிலவுவதையும் சுட்டிக் காட்டினார். இவர் விண்மீன்களின் இடமாறுதோற்றப் பிழைகளையும் ஆய்வு செய்தார். மேலும் திறந்தநிலை விண்மீன் கொத்து பிளையடெசில் உள்ள விண்மீன்களின் தொலைவுகளையும் கண்டுபிடித்தார். இவர்தான் 1875 இல் என்றி எசு. பிரிட்செட்டைக் கடற்படை வான்கானகத்துக்குத் தேர்ந்தெடுத்தார்.

வாழ்சிங்டன் டி.சி.யில் ஜார்ஜ்டவுனில் இருந்த ஆலின் மூதாதையர் வீடு

இவர் 1872 ஜூன் 5 இல் கணிதவியல் தூதுவர் எனும் இதழுக்கு "பை மதிப்பைச் செய்முறையால் தீர்மானித்தல்" எனும் ஆய்வை அனுப்பினார். இது இவ்விதழில் 1873 தொகுதி 2 இல் 113–114 பக்கங்களில் வெளியாகியது. இந்த ஆய்வில் இவர் இரண்டாம் காளை விரட்டில் அடைபட்ட காயம் ஆற்ரிக் கொண்டிருந்த போது தன் நண்பராகிய தளபதி ஓ.சி. பாக்சு அவர்களைத் தான்தோன்றிப் போக்கில் பை மதிப்பைக் கண்டறிய, மேற்கொள்ளச்செய்த செய்முறையின் முடிவுகளை வெளியிட்டார். சமத் தொலைவில் இணைகோடுகள் இடப்பட்ட மரத்தள மேற்பரப்பில் தாந்தோன்றிப் போக்கில் நுண் எஃகுக் கம்பியைத் திரும்பத் திரும்பத் தொடர்ந்து எறிந்து இச்செய்முறை செய்யப்பட்டது. பையின் மதிப்பு 2mi/an எனும் வாய்பாட்டால் தீர்மானிக்கப்பட்டது. இங்கு m என்பது மேற்கொண்ட எறிவு எண்ணிக்கையையும் l என்பது நுண் எஃகுக் கம்பியின் நீளத்தையும் a என்பது இணைகோடுகளுக்கிடையில் அமைந்த தொலைவையும் n என்பது குறுக்குவெட்டுகளின் எண்ணிக்கையையும் குறித்தது. இந்த ஆய்வாகிய பப்பனின் ஊசிச் சிக்கல் ,தாந்தோன்றிப் பதக்கூறு எடுத்தலுக்கான மிகத் தொடக்கநிலைச் செய்முறையாகும். இதைப் பின்னர் இரண்டாம் உலகப் போரில் மேன்காட்டன் திட்டத்தின்போது நிகோலசு மெட்ரோபோலிசு என்பார் மாண்டோ கார்லே முறை என்று பெயரிட்டு அழைத்தார்.

இவர் 1891 இல் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் 1896 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் வான்கோள இயக்கவியலில் விரிவுரை ஆற்றலானார். இப்பணியை 1901 வரை தொடர்ந்துள்ளார்.

இவருக்கு நான்கு குழந்தைகள் உண்டு: ஆசப் ஆல், இளவல். (1859–1930) எனும் வானியலாளர், சாமுவேல் சுடிக்னி ஆல் (1864–1936) எனும் பரிமாற்ர ஆயுள் காப்பீட்டு குழுமப் பணியாலர், ஆஞ்செலோ ஆல் (1868–1922) அமெரிக்க நாவாய் கல்விக்கழக கணிதவியல் பேராசிரியர், பெர்சிவால் ஆல் (1872–1953) கல்லவுதெத் பல்கலைக்கழகத் தலைவர். இவர்களில் ஆஞ்செலோ ஆல் 1892 இறந்துவிட்டார். ஆல் மேரி குத்தியரை 1901 ஓய்வுக்குப் பிறகு கன்னெக்டிகட்டில் கோழ்சென் சென்றதும் மணந்துகொண்டார்.

மேரிலாந்தில் இருந்த மகன் ஆஞ்சலோவைச் சந்திக்க அன்னபோலிசுவுக்குச் சென்றபோது 1907 இல் ஆல் இறந்தார்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

ஆலின் அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்

இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் இலாலண்டே பதக்கத்தை 1878 இலும் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தை 1879 இலும் அராகோ பதக்கத்தை 1893 இலும் பிரெஞ்சு அரசின் சிறப்பு ஆணையாகிய செவாலியர் ஆணையை 1896 இலும் பெற்றார்.[4]

நிலாவின் ஆல் குழிப்பள்ளமும் செவ்வாயின் நிலாவாகிய போபோசின் ஆல் குழிப்பள்ளமும் இவர் பெயர் இடப்பட்டுள்ளன[5] குறுங்கோள் 3299 ஆல் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Blunck, Jürgen (2009). "The Satellites of Mars; Discovering and Naming the Satellites". Solar System Moons: Discovery and Mythology. இசுபிரிங்கர் பதிப்பகம். p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-68852-5.
  2. Connecticut Revolutionary War Lists, 1775–1783. p. 20.
  3. Heads of families at the first U.S. census. Ct. By U.S. Bureau of the Census. Washington, 1908. (227p.): 45 Record of Conn. Men in mil. and naval service during the Rev. War, 1775–1783. By Henry P.Johnston. Hartford. 1889. (17,779p.): 61, 424, 548
  4. Asaph Hall obituary by W.S. Eichelberger, published in Astronomische Nachrichten, 1908
  5. "Phobos - Viking 1 Orbiter".

மேலும் படிக்க[தொகு]

  • Angelo Hall. An Astronomer's Wife: The Biography of Angeline Hall. Baltimore: Nunn & Company, 1908. (This book is public domain in the United States; a full scan can be found at archive.org.)
  • Percival Hall. Asaph Hall, Astronomer. Self-published, nd. (booklet, 46 pp.)
  • George William Hill. A Biographical Memoir of Asaph Hall, 1829–1907. Judd and Detwiler: Washington, DC, 1908. (This book is public domain in the United States; a full scan can be found at archive.org.)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசப்_ஆல்&oldid=3353522" இலிருந்து மீள்விக்கப்பட்டது