ஆங்கிலோ சீக்கியப் போர் நினைவுச்சின்னம்
ஆங்கிலோ சீக்கிய போர் நினைவுச் சின்னம் Anglo-Sikh War Memorial | |
---|---|
இந்திய பஞ்சாப் அரசு | |
Anglo sikh war memorial Feroze shah.jpeg பிரோசாசாவில் போர் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் | |
ஆங்கிலோ சீக்கியப் போரின் சீக்கிய வீரர்கள் | |
திறப்பு | 1976 |
அமைவிடம் | 30°51′46″N 74°49′00″E / 30.8628°N 74.8167°Eஆள்கூறுகள்: 30°51′46″N 74°49′00″E / 30.8628°N 74.8167°E பிரோசுபூர் |
வடிவமைப்பு | எச்.எசு.சோப்ரா |
ஆங்கிலோ சீக்கியப் போர் நினைவுச்சின்னம் (Anglo Sikh war memorial) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெரோசுபூர் மாவட்டம் பெரோசாசாவின் மோகா சாலையில் பஞ்சாப் அரசாங்கத்தால் கட்டப்பட்டுள்ளது. 1849 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13 அன்று சில்லியன்வாலாவில் பிரித்தானிய இராணுவத்திற்கு எதிராக போராடி இறந்த வீரர்களையும், 1846 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் நாள் சப்ரானில் போராடி இறந்த வீரர்களையும், 1845 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18 அன்று முத்கி மற்றும் பிரோசாவில் போராடி இறந்த வீரர்களையும் கௌரவிப்பதற்காக இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. [1][2][3]
கட்டட வடிவமைப்பாளர்[தொகு]
லூதியானாவிலுள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் மூத்த கட்டிடக் கலைஞர் எச்.எசு.சோப்ரா, சிர்கிந்து கால்வாய் அருகே மற்றும் பிரோசுபுரின் ராசத்தான் கால்வாயின் கரையில் ஒரு மூன்று மாடி நினைவுச்சின்னத்தை வடிவமைத்தார். [4][5] எச்.எசு சோப்ராவுக்கு அப்போது பஞ்சாப் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பிரோசா நினைவுச் சின்னக் குழுவின் துணைவேந்தராக இருந்த எம்.எசு இராந்தவா வழிகாட்டியாக இருந்தார். [6] நினைவுச்சின்னத்தின் நில வடிவமைப்பை அப்போதைய பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் எசு.அரிசிங் சாந்து மேற்கொண்டார்.
நினைவுச் சின்னம்[தொகு]
ஆங்கிலோ சீக்கியப் போர் நடந்த 2 எக்டேர் பரப்பளவில் இந்த நினைவுச்சின்னம் உள்ளது. நினைவுச்சின்னத்தின் தரை தளம் சுற்றியுள்ள பகுதிக்கு 2 மீட்டர் உயரத்தில் உள்ளது. [1][5] நினைவுச்சின்னத்தில் புகழ்பெற்ற ஓவியர்கள் யசுவந்து சிங் மற்றும் கிர்பால் சிங் ஆகியோரால் வரையப்பட்ட போர்க்களத்தை சித்தரிக்கும் சுவரோவியங்கள், உருவப்படங்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளன. [7] கன்னிங்காமின் வரலாற்றைச் சொல்லும் வெண்கலத்தில் செதுக்கப்பட்ட மேற்கோள்கள்; சா முகமதுவின் போர்கள்; பாட்டியாலா அருங்காட்சியகத்தில் இருந்து பஞ்சாப் அரசு நன்கொடையளித்த ஆங்கிலோ சீக்கிய போர் ஆயுதங்கள் முதலானவை நினைவுச்சின்னத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Anglo-Sikh War Memorial At Ferozepur Revisited After Four Decades". World Architecture Community (ஆங்கிலம்). 2018-12-26 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2018-12-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ferozepur Anglo-Sikh war memorial a picture of neglect". https://www.tribuneindia.com/news/punjab/community/ferozepur-anglo-sikh-war-memorial-a-picture-of-neglect/82397.html.
- ↑ "Protected monument status sought for Anglo-Sikh war memorials - Times of India". The Times of India. 2017-06-26 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2018-12-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Anglo Sikh War Memorial, Ferozepur". www.nativeplanet.com (ஆங்கிலம்). 2018-12-26 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2018-12-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 5.0 5.1 FerozepurOnline.com. "ANGLO-SIKH WAR MEMORIAL, FEROZESHAH". ferozepuronline.com. 2018-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 6.0 6.1 "Anglo Sikh War Memorial at Ferozeshah - SikhiWiki, free Sikh encyclopedia". www.sikhiwiki.org. 2018-12-26 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2018-12-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sharma, Vikramditya (1 March 2015). "Hardly any visitor for historical Anglo Sikh War Memorial at Ferozeshah". City Air News. Archived from the original on 27 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181227200443/https://www.cityairnews.com/content/hardly-any-visitor-historical-anglo-sikh-war-memorial-ferozeshah.
புற இணைப்புகள்[தொகு]
- ferozepur.nic.in
- punjabtourism. org பரணிடப்பட்டது 2020-08-11 at the வந்தவழி இயந்திரம்