ஆக்டிசெரா இசுடெலாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டிசெரா இசுடெலாட்டா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: லெப்பிடாப்பிடிரா
குடும்பம்: லைகேனிடா
பேரினம்: ஆக்டிசெரா
இனம்: ஆ இசுடெலாட்டா
இருசொற் பெயரீடு
ஆக்டிசெரா இசுடெலாட்டா
(டிரை மென், 1883)[1]
வேறு பெயர்கள்
  • லைகேனியா இசுடெலாட்டாடிரை மென், 1883

ஆக்டிசெரா இசுடெலாட்டா (Actizera stellata) சிவப்பு குளோவர் நீலம் எனப்படும் பட்டாம்பூச்சி நீலன்கள் (லைகேனிடே) குடும்பத்தினைச் சார்ந்தது. இது தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா, தெற்கு சூடான், கென்யா, உகாண்டா, ஜைர், தான்சானியா மற்றும் வடக்கு மலாவி ஆகிய நாடுகளில் காணப்படுகிறது தென்னாப்பிரிக்காவில் இது கிழக்கு கேப் மற்றும் ஆரஞ்சு ப்ரீ மாநிலத்தின் தெற்கு பகுதியில் காணப்படுகிறது.

ஆண்களின் இறக்கை நீட்டம் சுமார் 13–18 மிமீ ஆகும்.  இது பெண் பட்டாம்பூச்சியில் 15 முதல் 19 மிமீ ஆக உள்ளது. இப்பட்டாம் பூச்சிகள் ஜனவரி முதல் மே வரை சிறகடித்து பறப்பதைக் காணலாம். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் அதிக அளவில் காணலாம். வருடத்திற்கு நீட்டிக்கப்பட்ட தலைமுறை ஒன்று காணப்படும். [2]

இளம் உயிரிகள் டிரைபோலியம் ஆப்பிரிக்கானம் தாவரத்தினை உண்ணுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Actizera at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  2. Woodhall, Steve (2005). Field Guide to Butterflies of South Africa. Cape Town, South Africa: Struik. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86872-724-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டிசெரா_இசுடெலாட்டா&oldid=3073172" இலிருந்து மீள்விக்கப்பட்டது