ஆஃபியா சித்திகி
ஆபியா சித்திக்கி (Aafia Siddiqui உருது: عافیہ صدیقی ; பிறப்பு 2 மார்ச் 1972) மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் மற்றும் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பாகிஸ்தான் நரம்பியல் விஞ்ஞானி ஆவார். இவர் பல குற்றங்கள் செயததற்காக 86 ஆண்டுகள் தண்டனை பெற்றார். 2010 ஆம் ஆண்டில், இவர் ஏழு முறை கொலை முயற்சி மற்றும் அமெரிக்க ஊழியர்களைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார் , மேலும் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.[1]
சித்திகி பாகிஸ்தானில் ஒரு தியோபந்தி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார்.[2] 1990 இல், இவர் அமெரிக்காவில் படிக்கச் சென்று 2001 ஆம் ஆண்டில் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறிவியலில் பி.எச்.டி. பட்டம் பெற்றார். 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குத் திரும்பினார், மீண்டும் 2003 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட போரின் போது. இவர் அல்கொய்தாவுக்கு இவர் ஒரு தகவல் தொடர்பாளராகவும் நிதி உதவி அளித்ததாகவும் அந்தத் தாக்குதலில் கைதான கலித் செய்க் முகமது கூறியதன் அடிப்படையில் இவர் எஃப்.பி.ஐ தேடும் தகவல் - பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றார். அந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார்.[3][4] அந்த சமயத்தில் இவரும் இவரின் மூன்று குழந்தைகளும் பாக்கித்தானில் தலைமறைவாகினர்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் கஸ்னியில் இவர் இருந்ததைக் கண்டறிந்த பின்பு இவர் ஆப்கானித்தான் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கஸ்னியில் காவலில் இருந்தபோது, சோடியம் சயனைடு கொள்கலன்களுடன் குண்டுகளை தயாரிப்பதற்கான ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை இவர் வைத்திருந்ததாக காவல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். காவல் அதிகாரியால் சுடப்பட்டு பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் 2008 செப்டம்பரில் கஸ்னியில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு அமெரிக்க சிப்பாயைத் தாக்கியது மற்றும் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இவர் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டார். இவர் பிப்ரவரி 3, 2010 அன்று குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். பின்னர் 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
சுயசரிதை
[தொகு]குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை
[தொகு]ஆஃபியா சித்திகி பாகிஸ்தானின் கராச்சியில், பிரித்தானிய பயிற்சி பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். முஹம்மது சலே சித்திகி மற்றும் இஸ்லாமிய ஆசிரியர், சமூக சேவகர் மற்றும் தொண்டு தன்னார்வலரான இஸ்மெட் ( நீ ஃபாரூச்சி) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார் .[5][6] இவர் கராச்சியைச் சேர்ந்த உருது மொழி பேசும் முஹாஜிர், தியோபண்டி சமூகத்தைச் சேர்ந்தவர்.[7]
இஸ்மெட் சித்திகி அரசியல் மற்றும் மத வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஆவார். மேலும் இவர் வாழ்ந்த இடங்களில் இஸ்லாம் குறித்த வகுப்புகள் கற்பித்தல், ஐக்கிய இஸ்லாமிய அமைப்பை நிறுவுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். மேலும் இவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். ஹூடூத் கட்டளைகளுக்கு பெண்ணிய எதிர்ப்பை எதிர்கொள்வதில் இவர் அளித்த ஆதரவு ஜெனரல் முஹம்மது ஜியா-உல்-ஹக்கின் கவனத்தை ஈர்த்தது. அவரது சகோதரர் முஹம்மது, டெக்சாஸின் ஹூஸ்டனில் ஒரு கட்டிடக் கலைஞராகப் படிக்கப் படித்தார். அவரது சகோதரி ஃபோசியா ஹார்வர்ட் பயிற்சி பெற்ற நரம்பியல் நிபுணர் ஆவார், இவர் பால்டிமோர் சினாய் மருத்துவமனையில் பணிபுரிந்தார் . மேலும் இவர் இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணியினை மேற்கொண்டார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Dr Aafia Siddiqui doesn't want to return: FO spokesperson". Dunya News. Archived from the original on 10 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
- ↑ "America's Most Wanted: 'The Most Dangerous Woman in the World'". Der Spiegel. 27 November 2008. Archived from the original on 5 May 2010. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
- ↑ Scroggins, Wanted Women, 2012: p.245
- ↑ Scroggins, Wanted Women, 2012: p. 298
- ↑ Scroggins, Deborah (1 March 2005). "Wanted Women—Faith, Lies and The War on Terror: The Lives of Ayaan Hirsi Ali and Aafia Siddiqui". https://www.vogue.com/article/read-it-now-wanted-women-faith-lies-and-the-war-on-terror-the-lives-of-ayaan-hirsi-ali-and-aafia-siddiqui.
- ↑ MD, Peter A. Olsson (2014-02-25). The Making of a Homegrown Terrorist: Brainwashing Rebels in Search of a Cause (in ஆங்கிலம்). ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781440831027. பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.
- ↑ Scroggins, Wanted Women, 2012: p.4-6