அ. இராஜா (தேவிகுளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. இராஜா
Member of the கேரள சட்டமன்றம் சட்டமன்றம்
for தேவிகுளம்
பதவியில்
மே 2021 – மார்ச் 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 அக்டோபர் 1986 (1986-10-17) (அகவை 37)
கேரளா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்சைனி பிரியா
பிள்ளைகள்அக்சரா, ஆராத்தியா
முன்னாள் கல்லூரிஅரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்

அ. இராஜா (A. Raja), இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் கேரளா சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2021 கேரளா சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, கேரளா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த இவர் பட்டியல் சமூக சாதிச் சான்றிதழைக் காட்டி தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மார்ச் 2023ல் கேரளா உயர் நீதிமன்றம் இவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதிலிருந்து தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியது.[2][3][4]

தீர்ப்பு குறித்து அ. இராஜா இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு கேரளா உயர் நீதிமன்றம் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.[5]

வாழ்க்கை[தொகு]

தோட்டத் தொழிலாளர்களான அந்தோனி இலட்சுமனன் - ஈஸ்வரி தம்பதியருக்கு 17 அக்டோபர் 1986 அன்று பிறந்த அ. இராஜா, கோவை அரசுச் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று[6], 2009ஆம் ஆண்டு முதல் தேவிகுளததில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

அரசியல்[தொகு]

மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்த அ. இராஜா 2021 கேரளா சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில், தன்னை எதிர்த்து நின்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் டி. குமாரை விட 7848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7][8]

தகுதி நீக்கம்[தொகு]

கிறித்தவரான அ. இராஜா தான் பட்டியல் சமூகத்தவர் என பொய்யாக சாதி சான்றிதழ் தாக்கல் செய்து, தனித் தொகுதியான தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் என்ற வழக்கில், மார்ச் 2023ல் கேரளா உயர் நீதிமன்றம், அ. இராஜாவை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  2. "Kerala HC declares A Raja's election null and void: Can Christians, Muslims claim SC status?". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-20. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
  3. Benny, Navya (2023-03-20). "'Practising Christian, Not A Scheduled Caste Member': Kerala High Court Annuls CPM MLA A Raja's Election From Reserved Constituency". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
  4. Kerala HC declares election of CPM legislator A Raja null and void
  5. Kerala HC grants interim stay for A Raja's disqualification, 10 days to approach SC
  6. "ദേവികുളത്ത് അഡ്വ.എ രാജ സിപിഐ എം സ്ഥാനാര്ത്ഥി". Deshabhimani (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  7. ആലയ്ക്കാപ്പള്ളി, സാജു. "രാജ- ദേവികുളത്തിന്റെ രാജാധിരാജ". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  8. "Kerala CPI(M) MLA A. Raja asked to pay fine of ₹2,500" (in en-IN). The Hindu. 2021-06-07. https://www.thehindu.com/news/national/kerala/kerala-cpim-mla-a-raja-asked-to-pay-fine-of-2500/article34754363.ece. 
  9. "Fake caste certificate: Devikulam MLA Raja's election declared void". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._இராஜா_(தேவிகுளம்)&oldid=3704097" இலிருந்து மீள்விக்கப்பட்டது