அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசினர் சட்டக்கல்லூரி, கோயம்புத்தூர்
வகைசட்டக் கல்லூரி
உருவாக்கம்1979
முதல்வர்கே. எசு. கோபாலகிருசுணன்
அமைவிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
11°02′34″N 76°52′05″E / 11.042886°N 76.867931°E / 11.042886; 76.867931ஆள்கூற்று: 11°02′34″N 76°52′05″E / 11.042886°N 76.867931°E / 11.042886; 76.867931
சேர்ப்புடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
இணையத்தளம்www.glccbe.ac.in

அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் உள்ள 7 அரசினர் சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். இவற்றை சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் சட்டக்கல்வியினை தமிழ்வழி கற்பிக்க வகை செய்யவும் 1953ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் சட்டக்கல்வித்துறை மேல்நடத்திச் செல்கிறது. கோயம்புத்தூர் கல்லூரி 1979-80 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. இங்கு பட்ட,பட்டமேற்படிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆடவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் இயங்குகிறது.

கோயம்புத்தூர் அரசினர் சட்டக்கல்லூரியின் நுழைவாயில்

வரலாறு[தொகு]

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 1979-80 கல்வியாண்டில் துவங்கப்பட்ட மூன்று அரசு சட்டக்கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் சட்டக் கல்லூரி, மதுரை, அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி ஆகியவை இதர இரு கல்லூரிகளாகும்.

அமைவிடம்[தொகு]

தொடக்கத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இயங்கிய இக்கல்லூரி போதிய இடவசதியின்மையால், கோவை நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதமலை அடிவாரத்திற்கு மாற்றப்பட்டு செயற்பட்டு வருகிறது.

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

  • சட்ட இளநிலைப் பட்டம் (எல்.எல்.பி)
  • சட்ட முதுநிலைப் பட்டம் (எல்.எல்.எம்)

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]