அஷர் (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Usher
அஷர்
Usher Ring.jpg
அஷர்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் அஷர் ரேமண்ட் IV
பிறப்பிடம் சாட்டனூகா, டென்னசி, ஐக்கிய அமெரிக்கா
அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள் ஆர்&பி, பாப் இசை
தொழில்(கள்) பாடகர், பாடல் எழுத்தாளர், இசை தொழிலதிபர், நடிகர், சமூக சேவையாளர்
இசைத்துறையில் 1994–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள் லஃபேஸ் ரெக்கர்ட்ஸ் (1994–2000/2004–இன்று)
அரிஸ்டா ரெக்கர்ட்ஸ் (2001–2004)
இணைந்த செயற்பாடுகள் ஜெர்மெய்ன் டுப்ரீ, ஆர். கெலி, லூடக்கிரிஸ், லில் ஜான், அலீஷா கீஸ், மானிகா, மேரி ஜே. பிளைஜ், ஜேடகிஸ், டி-பெய்ன், யங் ஜீசி
இணையத்தளம் www.usherworld.com

அஷர் ரேமண்ட் IV (Usher Raymond IV, பிறப்பு அக்டோபர் 14, 1978) நடு 1990களில் புகழுக்கு வந்த அமெரிக்க பாடகரும் நடிகரும் ஆவார். பொதுவாக "அஷர்" என்று அழைக்கப்படுவார். இன்று வரை கிட்டத்தட்ட 30 மில்லியன் ஆல்பம்களை விற்றுக்கொண்டு ஐந்து கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவர் யூஎஸ் ரெக்கர்ட்ஸ் என்ற பாடல் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிலதிபரும் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்.பி.ஏ. கூடைப்பந்தாட்ட அணியின் ஒரு அதிபர் ஆவார்.

டாலஸ், டெக்சஸ் நகரத்தில் பிறந்த அஷர் சாட்டனூகா, டென்னசியில் வளந்தார். சிறுவராக இருக்கும்பொழுது கிறிஸ்தவ தேவாலயத்தில் பாடினார். அட்லான்டாவுக்கு வந்து உயர்பள்ளியை சேர்ந்தார். இதே காலத்தில் 1994இல் இவரின் முதலாம் ஆல்பம், அஷர், வெளிவந்தது. 1997இல் இவரின் இரண்டாம் வெளிவந்த ஆல்பம், மை வே, வெளிவந்து இதிலிருந்து ஒரு பாடலுக்காக அஷர் முதலாம் கிராமி விருதை வென்றுள்ளார்.

மொயீஷா என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் அஷர் நடிகத் தொடங்கப்பட்டார். 1998இல் இவர் முதலாக த ஃபாகல்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது அட்லான்டாவில் ஒரு புறநகரத்தில் அஷர் வசிக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷர்_(பாடகர்)&oldid=1507910" இருந்து மீள்விக்கப்பட்டது