அவ் எம். எல். டேவிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவ் டேவிசு
Huw Davies
துறைவேதியியல்
பணியிடங்கள்எமரி பல்கலைக்கழகம்
பஃபலோ பல்கலைக்கழகம்
வேக் பாரசுட்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கார்டிப் பல்கலைக்கழகம்
கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம்
ஆய்வேடுபீனாலிக் அல்லாத ஆக்சிசனேற்ற இணைப்பு (1980)

அவ் எம். எல். டேவிசு (Huw M. L. Davies) ஒரு பிரித்தானிய வேதியியலாளர் ஆவார். ராயல் வேதியியல் கழகத்தில் இவர் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலுள்ள எமரி பல்கலைக்கழகத்தில் ஆசா கிரிக்சு கேண்ட்லர் அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட கரிம வேதியியல் பேராசிரியராக இருந்து வருகிறார் [1].

இங்கிலாந்து நாட்டின் வேல்சு நகரிலுள்ள அபெரிசுட்வித் மாகாணத்தில் பிறந்த இவர் 1977 ஆம் ஆண்டு கார்டிப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதல் வகுப்புடன் இளநிலை பட்டம் பெற்றார். 1980 ஆண்ட்டு கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்[2] பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பிந்தைய முனைவர் பதவிக்குப் பிந்தைய ஆராய்ச்சி நிலையை அடைந்த பின்னர் இவர் வேக் வன பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்து அங்கு முழுமையான பேராசிரியரானார். பின்னர் இவர் பஃபலோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் அப்பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும் லார்க்கின் கல்விக் கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியர் பதவிகளை வகித்தார். 2008 ஆம் ஆண்டு எமோரி பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.

பேராசிரியர் டேவிசின் ஆராய்ச்சி புதிய செயற்கை முறைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை மொத்த தொகுப்பு மற்றும் மருந்து கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதாக அமைந்திருந்தது. இவரது ஆய்வுகள் சமச்சீரற்ற வினையூக்கிகள், கார்பீனாய்டு வேதியியல், புதிய செயற்கை முறையின் வளர்ச்சி, உயிரியல் ஒப்புமையுடன் செயல்படும் இயற்கை பொருட்களின் ஒட்டு மொத்த தொகுப்பு மற்றும் சமச்சீரற்ற சிகிச்சை முகவர்களின் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. பல ஆராய்ச்சி குழுக்கள் இவரது சமச்சீரற்ற டைரோடியம் வினையூக்கிகளைப் பயன்படுத்தியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Davies Group - Professor Huw M. L. Davies". 19 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Huw Davies". Emory University. 12 செப்டம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 September 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவ்_எம்._எல்._டேவிசு&oldid=3232570" இருந்து மீள்விக்கப்பட்டது