அவுட்லுக் எக்சுபிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுட்லுக் எக்சுபிரசு
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு6.00.2900.5512 / 21 ஏப்ரல் 2008
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ், மாக் ஓஎஸ், யுனிக்ஸ்/சொலாரிஸ்
உருவாக்க நிலைகைவிடப்பட்டது
மென்பொருள் வகைமைமின்னஞ்சல் கிளையண்ட், செய்தி படிப்பானர்
உரிமம்பயனர் உரிம ஒப்பந்தம்.
இணையத்தளம்அவுட்லுக் எக்ஸ்பிரஸ்: மின்னஞ்சல் மற்றும் செய்தி வாசிப்பான்

மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்சுபிரசு அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 98 இல் இருந்து. இது மைக்ரோசாப்ட் இன்ரநெட் எக்ஸ்புளேளருடனும் இணைத்தே விநியோகிக்கப்டுகின்றது. இது விண்டோஸ் 95 இயங்குதளத்திற்கும் ஆப்பிள் வகைக்கணிகன்களிலும் இப்பதிப்பானது விநியோகிப்படுகின்றது எனினும் இதன் Mac OS X இலிருந்து மாக்கிண்டோஷ் கணினிகளிற்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்புடன் சேர்ந்து விநியோகிப்பதால் இது உள்ளடக்கபடவில்லை. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் விண்டோஸ்மெயில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளை மாற்றீடு செய்துள்ளது. மைக்ரோட்சாப்ட் விண்டோஸ் லைவ்மெயில் டெக்ஸ்டாப் என்ற ஓர் மென்பொருளையும் விருத்தி செய்து கொண்டு வருகின்றது. இவ்விரண்டினதும் வழிவந்த பதிப்பாக விண்டோஸ் லைவ் மெயில் விளங்குகின்றது.

மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 3.0 இல் இணைப்பாக வந்த மைக்ரோசாப்ட் இணைய மின்னஞ்சல் மற்றும் செய்தி மென்பொருளை இது மாற்றீடு செய்துள்ளது.[1][2][3]

அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ஆனது மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்கின்ற ஆபிஸ் மென்பொருளுடன் வினியோகிப்படுகின்ற ஓர் மாறுபட்ட பிரயோக மென்பொருள் ஆகும். இவ்விரண்டு மென்பொருட்களும் ஓர் பொதுவாக மூலநிரலைப் பகிர்வதில்லையாயினும் கட்டமைப்பில் ஒரே பாணியையே பின்பற்றுகின்றன. இரண்டு பெயர்களும் ஒரே மாதிரியாக உள்ளமையால் அநேகமானவர்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அவுட்லுக் இன் ஓர் வசதி குறைக்கப்பட்ட (stripped-down) பதிப்பாகக் கருதுகின்றனர். அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மைக்ரோசாப்ட் இயங்குதளத்துடன் வருவதால் மிகப்பெருமளவில் பாவிக்கப்பட்ட மென்பொருளாக விளங்கியது இது வைரஸ் தாக்குதல்களிற்கும் அடிக்கடி உட்பட்டது. மாக்கிண்டோஷ் கணினிகளுக்கான பதிப்பானது இதைவிட வைரஸ் பிரச்சினைகள் இருந்தாலும் இப்பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் விண்டோஸ் முகவரிப் புத்ததையே பாவித்தாலும் இவை இரண்டும் வெவ்வேறான பிரயோகங்கள். அத்துடன் இது விண்டோஸ் மெசன்ஜருடன் ஒத்திசைவானது.

சரித்திரம்[தொகு]

அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4.0 உடன் சேர்த்து செப்டம்பர் 1997 வெளிவந்தது. இது மைக்ரோசாப்ட் இண்டநெட் மெயில் அண்ட் நியூஸ் என்று அழைக்கபடும் மின்னஞ்சல் மற்றும் செய்திகளுக்கான மென்பொருளின் வழிவந்தது ஆகும். மைக்ரோசாப்ட் இண்டநெட் மெயில் அண்ட் நியூஸ் என்கின்ற மென்பொருளானது இண்டநெட் எக்ஸ்புளோளர் 3.0 உடனான ஓர் பொருத்து என்பதுடன் அது வெறும் எழுத்துக்களால் ஆன மின்னஞ்சலை மாத்திரமே ஆதரித்தது.

ஒருகட்டத்தில் வெள்ளோட்டத்தில் (பீட்டா) இருந்த அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளானது எரிதம் (ஸ்பாம்) வடிகட்டும் வசதியினைக் கொண்டிருந்த பொழுதிலும் வெளியிடுவதற்கு முன்னர் இவ்வசதிகளை நீக்கப்பட்டே வெளிவந்தது. பல்வேறு பட்ட இணையத்தளங்களும் செய்திக் குழுக்களும் பெருந்தொகையாகச் சந்தைப்படுத்துவதற்காக இது உறுதியானதல்ல என்ற கருத்தை வெளியிட்டிருந்ததே இதன் காரணம் ஆகும். பின்னர் இரண்டு வருடங்களின் பின்னர் இதே முறையைப் பின்பற்றி மைக்ரோசாப்ட் அவுட்லுக் எரிதங்களை வடிகட்டும் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிப்புக்களும் கோப்பு முறையும்[தொகு]

  • அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 4 விண்டோஸ் 98 ஜூன் 1998 இல் வெளிவந்தது. கோப்புக்களானது *.mbx முறையில் சேமிக்கப்படும். (யுனிக்ஸ் இயங்குதளத்தில் உள்ள MBOX உடன் ஒப்பிடக்கூடியது.)
  • அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 5 விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்புடன் வெளிவந்தது. *.dbx முறையில் கோப்புக்கள் சேமிக்கப்ப்டும் இதிலிருந்து ஒவ்வோர் கோப்புறைக்க்கும் தனித்தனியான கோப்புக்கள் உருவாக்கப் பட்டன.
  • அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 5.0 விண்டோஸ் 2000 உடன் பெப்ரவரி 2000 வெளிவந்தது.
  • அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 5.5 விண்டோஸ் மில்லேனியம் பதிப்புடன் ஜீன் 2006 இல் வெளிவந்தது .
  • அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6 விண்டோஸ் எக்ஸ்பி பதிப்புடன் அக்டோபர் 2001 இல் வெளிவந்தது.
  • அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6 சேவைப் பொதி 2 விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 உடன் ஆகஸ்ட் 2004 இல் வெளிவந்தது.
  • அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6 சேவைப் பொதி 3 விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 உடன் ஏப்ரல் 2008 இல் வெளிவந்தது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]