அல்வார் ஆல்ட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல்வார் ஆல்ட்டோ, எனப் பரவலாக அறியப்பட்ட, "ஹியூகோ அல்வார் ஹென்றிக் ஆல்ட்டோ" (பெப்ரவரி 3, 1898 - மே 11, 1976) இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். இவர்பின்லாந்து நாட்டிலுள்ள குவொர்தானே (Kuortane) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு நில அளவையாளர். இவர் 1921 ல், ஹெல்சிங்கி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத் துறையில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் இவர் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார்.

1924 ஆம் ஆண்டு, தன்னிலும் நான்கு வயது மூத்த கட்டிடக்கலைஞரான ஐனோ மார்சியோ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1949ல் ஐனோ இறந்த பின்னர் 1952 ஆம் ஆண்டு தன்னிலும் 25 வயது இளையவரான இன்னொரு கட்டிடக்கலைஞர் எல்சா கைசா மக்கினியேமி என்பவரை மணந்தார்.

1946 தொடக்கம் 1948 வரையில் MIT இல் கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 1963 தொடக்கம் 1968 வரை பின்லாந்து அக்கடமியின் தலைவராகவும் பதவி வகித்தார்.

இவர் ஹெல்சிங்கி நகரில் தனது 78 ஆவது வயதில் காலமானார்.

அல்வார் ஆல்ட்டோவின் கட்டிடங்களின் வடிவமைப்பு, ஒரு பொருளின் வடிவம் (form) அப் பொருளின் செயற்பாட்டின் (Function) அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றது என்ற கொள்கையை அடியொற்றி அமைந்தது. மனிதன், இயற்கை, கட்டிடம் ஆகிய மூன்றையும் சிறப்பாகக் கையாண்டு அவற்றுக்கிடையிலான தொடர்புகளை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் வகையில் அவருடைய கட்டிடங்கள் அமைந்திருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்வார்_ஆல்ட்டோ&oldid=1868444" இருந்து மீள்விக்கப்பட்டது