அலேட்ச் பனியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
யுங்பஃரௌ-அலேட்ச்-பியட்ஷ்ஹார்ன்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
அலேட்ச்சு பனிப் பையாறு
வகைஇயற்கை
ஒப்பளவுvii, viii, ix
உசாத்துணை1037
UNESCO regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2001 (25th தொடர்)
விரிவாக்கம்2007

அலேட்ச் பனியாறு (Aletsch Glacier) ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனியாறுகளில் மிகப்பெரியதாகும்.

அமைவிடம்[தொகு]

இதன் நீளம் 23 கிலோமீட்டர் (75,463 அடி) மற்றும் இதன் பரப்பளவு 120 சதுர கிலோமீட்டர் (ஏறக்குறைய 45 சதுர மைல்கள்). இது தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. யுங்பஃரௌ (Jungfrau) பகுதியில் சுமார் 4000 மீட்டர் (13,124 அடி) கடல் மட்டத்திற்கு மேல் இதன் பணிப்பிடிப்பு நிலை மேலும் மசா ஆழ்பள்ளத்தாக்கில் (Massa Gorge) சுமார் 2,500 மீட்டர் (8,202 அடி) பள்ளத்தில் பனியாற்று குகை அமைந்துள்ளது.

இந்த பனியாறு யுங்பஃரௌ மலைச்சிகரத்தின் தெற்கு பகுதியை சுற்றியுள்ள இடத்திலிருந்து கீழிறங்கி இரோன் ஆற்று பள்ளத்தாக்கின் மேற்பகுதியை அடைகிறது. இதன் மேற்கில் அலேட்ச்ஹார்ன (4,195 மீட்டர்/13,763 அடி) சிகரமும், கிழக்கில் மார்யலென்சீ பனியாற்று ஏரியும் (2,350 மீட்டர்/7,711 அடி) உள்ளது. இரோன் ஆறு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் தெற்கு பகுதியில் கிழக்கு-மேற்கு திசையில் பாய்கிறது.

தோற்றமைப்பு[தொகு]

அலேட்ச் பனியாறு மூன்று பெரிய அடைபனி கிளைகளை கொண்டுள்ளத்து. இம்மூன்று அடைபனி கிளைகளும் யுங்பஃரௌ பகுதியை சுற்றி பரவியுள்ளது அவை: அலேட்ச் அடைபனி, யுங்பஃரொ அடைபனி, யெவிக்ஷ்னிபஃலட் அடைபனி. இந்த அடைபனி கிளைகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் தொடர் பனி சேகரிப்பு பிரதேசமாகும். என்னென்றால் இவ்விடத்தில் இருந்துதான் பனியாற்றிக்கு வற்றாமல் பணியை ஊட்டிக்கொண்டிருக்கிறது.

அலேட்ச் பானியாற்றின் கிளைகள் காங்கோர்டியாபிளாட்ஸ் (Konkordiaplatz) அல்லது காங்கோர்டியா (concordia) என்றழைக்கப்படும் இடத்தை வந்தடைகிறது. இவ்விடத்திலிருந்து அலேட்ச் பனியாறு தனது 23 கிலோமீட்டர் பயணத்தை துவங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலேட்ச்_பனியாறு&oldid=2024031" இருந்து மீள்விக்கப்பட்டது