அலுவங்குடி மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுவங்குடி மகாதேவர் கோயில்

அலுவங்குடி மகாதேவர் கோயில், இந்தியாவின் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மலைக்காடுகளில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். இது பரசுராமரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு ராமர் பூசைகள் செய்ததாக சோதிடச்சடங்கான தேவபிரஷ்ணத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. [1] [2]

நீண்ட காலமாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த இக்கோயிலானது 1940களில் ஒரு வேட்டைக்காரனால் கண்டுபிடிக்கப்பட்டது. குருநாதன்மண்ணு, தெக்குத்தோடு போன்ற இடங்களில் வசிப்பவர்கள் முதலில் வந்து கோயிலை ஆய்வு செய்தனர். இப்போதெல்லாம், ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளில் வழக்கமான பூசைகள் நடத்தப்படுகின்றன. [3] மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி நாளில் சிறப்பு பூசைகளும் திருவிழாவும் இங்கு நடத்தப்படுகின்றன.

அமைவிடம்[தொகு]

ரன்னி வன கோட்டத்தின் வடசேரிக்கரா எல்லைக்கு உட்பட்ட அடர்ந்த காட்டுக்குள் இக்கோயில் அமைந்துள்ளது. அருகில் குருநாதன்மன்னுவிலும், தூம்பக்குளத்திலும் மக்கள் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "മിത്തുകളും ഗോത്രാചാരങ്ങളും കൂടികലർന്ന ആലുവാങ്കുടി ക്ഷേത്രം! കാനന യാത്ര രസകരം...സഞ്ചാരികൾക്ക് സമ്മാനിക്കുക മറക്കാനാവാത്ത അനുഭവം" (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  2. "ശിവരാത്രി; ആലുവാംകുടി കാനനക്ഷേത്രത്തിൽ ഭക്തജന തിരക്ക് | Madhyamam" (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
  3. "കാളകൂടം പാനം ചെയ്തവൻ കുടിയിരിക്കുന്നിടം എന്ന് വിശ്വസിക്കപ്പെടുന്നിടത്തേക്ക് ഒരു ശിവരാത്രിയിൽ..." (in ஆங்கிலம்). 2020-03-11. பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.

வெளி இணைப்புகள்[தொகு]