அலி சேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலி சேதி (Ali Sethi உருது / பஞ்சாபி: علی سیٹھی  ; /s eɪ t iː / ; பிறப்பு ஜூலை 2, 1984) ஒரு பாக்கித்தானியப் பாடகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சேதி தனது தி விஷ் மேக்கர் எனும் தனது முதல் புதினத்தின் மூலமாக உலகம் முழுவதும் பரவலாக அரியப்படுகிறார்.

2013 ஆம் ஆண்டில், அவர் தனது இசை வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார் . இவர் 2013 ஆம் ஆண்டில் வெளியான தி ரிலக்டன்ட் ஃபண்டமண்டலிஸ்ட் திரைப்படத்தில் பாடகராக அறிமுகமானார்.அதே ஆண்டின் பிற்பகுதியில் மொஹாபத் கர்னே வாலே எனும் ஒற்றைப் பாடலை இவர் வெளியிட்டார். பின்னர் நான்கு பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றினையும் இவர் வெளியிட்டார். அதில் ரேஷ்மாவின் கிதய் நைன் நா ஜோரி எனும் பாடலினை இவர் மீளுருவாக்கம் செய்தார். இது இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் பரவலான கவனத்தினைப் பெற்றுத் தந்தது.[1] 2015 ஆம் ஆண்டில் வெளியான சேந்தோ திரைப் படத்திற்காக "க்யா ஹோகா க்யா ஹோகா" மற்றும் "ஆ கோ" ஆகிய இரண்டு பாடல்களைப் பதிவுசெய்தார் மற்றும் கோக் ஸ்டுடியோவின் எட்டாவது பருவ நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார்.[2]

2016 ஆம் ஆண்டில் முழுவதுமாக இவர் எழுதிய தனிப்பாடலான மஹி மேரா எனும் பாடலினை வெளியிட்டார், இது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.[3] 15 வது லக்ஸ் ஸ்டைல் விருதுகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான லக்ஸ் ஸ்டைல் விருதுக்காக இவர் பரிந்துரைக்கப்பட்டார் [4] மற்றும் [4] வது ARY திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான ஆண்கள் பிரிவில் ஆ கோ பாடலைப் பாடியற்காக இவர் பரிந்துரைக்கப்பட்டார் .[5] நான்காவது ஹம் விருதுகளில் சிறந்த ஒற்றை பாடலுக்கான பிரிவில் "கிதாய் நைன் நா ஜோரெய்ன்" பாடலுக்காக இவர் பரிந்துரைக்கப்பட்டார்.[6]

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

அலி சேதி ஜூலை 2, 1984 இல், லாகூரில், நஜாம் சேதி மற்றும் ஜுக்னு மொஹ்சின் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் . அவரது பெற்றோர் இருவரும் மூத்த பத்திரிகையாளர்கள் ஆவர். இவரது தந்தை பஞ்சாபின் செயல் முதல்வராகவும், பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் ஒரு வருடம் பணியாற்றினார். அவரது தாயார் பாகிஸ்தானின் முதல் ஆங்கில மொழி சுயாதீன செய்தி இதழான தி ஃப்ரைடே டைம்ஸை நிறுவினார்.[7] இவருக்கு மீரா சேதி எனும் ஒரு சகோதரி உள்ளார். அவர் பத்திரிகையாளர் மற்றும் நடிகை ஆவார்.[8]

2006-2012: ஆசை தயாரிப்பாளர், மற்றும் இசை தொடக்கங்கள்[தொகு]

2006 ஆம் ஆண்டில், தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்த பிறகு சேதி தி விஷ் மேக்கர் எனும் ஒரு ஆங்கில புதினத்தினை எழுதத் தொடங்கினார். இதில் நடுத்தர வர்க்க மற்றும் தாராளவாத குடும்பத்தில் வசிக்கும் மூன்று தலைமுறை கதாப்பாத்திரங்களின் மூலமாக பாக்கித்தானின் அரசியல் கள விவரங்களையும் வெளிப்படுத்தியிருப்பார்.[9] பட்டம் பெற்ற பிறகு நான்கு மாதங்கள் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்தார். ஆனால் தனது முதல் புதினத்தினை விரைவாக எழுதுவதற்காக இவர் அந்தப் பணியினை விட்டு விட்டார்.[10] இந்த நூல் ரிவர்ஹெட் ஹார்ட்கவர் மற்றும் பின்னர் பெங்குயின் புக்ஸ் பதிப்பகத்தால் 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, மேலும் பரவலான நேர்மறை பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றது. இத்தாலி, டச்சு, ஜெர்மன், இந்தி, சீன மற்றும் துருக்கிய மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "'Kithay Nain Na Jorin': Ali Sethi's tribute to Reshma set to launch at KLF". Mahjabeen Mankani. The Express Tribune. February 4, 2015. August 18, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Coke Studio Season 8 Songs & Artists Revealed!". Pakistan Advertisers Society. September 24, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 14, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Wattoo, Sahar (February 2, 2016). "'Mahi Mera' : Ali Sethi launches his latest single". The Daily Times. March 3, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 28, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Nominees for the LUX Style Awards 2016 have been announced and for many designers, directors, musicians and stars, it's going to be a very joyous Eid". correspondent. Dawn News. May 30, 2016. May 31, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "The nominations for the ARY Film Awards are out, with many stunning debut actors, directors and musicians vying for the coveted awards". ARY News. February 7, 2016. February 7, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "The awards will be held in Karachi on April 23rd and the voting lines are open till April 6, 2016". HIP. April 6, 2016. April 4, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Biography". najamsethi.com. July 2, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 7, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Actress Mira Sethi Brief Biography". Pakistan Mind Updates. June 12, 2014. August 18, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  9. Taylor, Catherine (July 25, 2009). "The Wish Maker By Ali Sethi". தி கார்டியன். https://www.theguardian.com/books/2009/jul/25/wish-maker-ali-sethi-review. பார்த்த நாள்: August 16, 2015. 
  10. Bhatia, Samita. "The write choice – For Pakistani author Ali Sethi, writing a book was a bit like joining the family business, says Samita bhatia". The Telegraph. http://www.telegraphindia.com/1090809/jsp/graphiti/story_11332943.jsp. பார்த்த நாள்: August 18, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_சேதி&oldid=3315977" இருந்து மீள்விக்கப்பட்டது