அலி அகமது உசேன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலி அகமது உசேன் கான் (Ali Ahmed Hussain Khan மார்ச் 21, 1939 – மார்ச் 16, 2016) என்பவர் இந்தியாவின் ஒரு செனாய் இசைக்கலைஞர்.[1] இவர் கல்கத்தாவில் பிறந்தவர்.

பின்னணி[தொகு]

இவரின் தாத்தா வாசிர் அலி கான் இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவியான செனாயை முதன்முதலில் பாங்கிங்காம் அரண்மனையில் வாசித்தவர். இவரின் தந்தையான அலி ஜான் கான் மாமா நசீர் உசேன் கான் மற்றும் இம்தாத் உசேன் கான் ஆகியோர் வாரனாசியில் புகழ்வாய்ந்த செனாய் இசைக்கலைஞர்களாக இருந்தனர். அலி அகமது உசேன் கான் உடல் நலக்குறைவால் மார்ச் 16, 2016 அன்று காலமானார்.[2]

வாழ்க்கை[தொகு]

இவர் 1974 முதல் கல்கத்தாவின் சங்கீத ஆராய்ச்சி அகடாமியில் இசைவிருந்து படைத்தவர். 1973ஆம் ஆண்டு தில்லி விக்யான் பவனில் நடந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடக்க விழாவில் ஷெனாய் வாசித்தவர் என்ற பெருமைக்குரியவர். அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இவரது இசைநிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்றன.

நிகழ்ச்சிகள்[தொகு]

அலி அகமது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய இராச்சியம், செர்மனி, சுவிசர்லாந்து, நெதர்லாந்து, பிரான்சு, பெல்சியம், உருசியா, துனீசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிபைன்சு போன்ற பல நாடுகளில் இருபது ஆண்டுகள் இசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பல சந்தரபங்களில் இவர் அரசுக்களாலும் தனியாராலும் அழைக்கப்பட்டு இசை விழாக்களில் கலந்துகொண்டுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • அகில இந்திய வானொலியின் உயர்தர கலைஞர்
  • அனைத்து வங்காள இசை மாநாடு (விருது & தங்க பதக்கம்)
  • காவதி தேவி இசை (தங்க பதக்கம்)
  • தான்சேன் சமரோவின், தங்க பதக்கம் பீகார் ஷரீப் திரு எம். ஃபரூக் அவர்களால் வழங்கப்பட்டது
  • ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆஸ்டின் இந்திய பாரம்பரிய இசை வட்டத்தின் சார்பில் விருதும் சிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது
  • பிஷ்வா பங்கா சம்மேளனத்தின் விருதை இந்திய பாராளுமன்றத்தின் அவைத்தலைவரான சோம்நாத் சட்டர்சி சபாநாயகர் வழங்கினார்.
  • போர்ட் பிளேர் அரசால் விருது வழங்கப்பட்டது
  • இந்தோனேசியாவின் பாங்காகில் உள்ள இந்திய சமூகத்தின் விருது
  • சுருதி நந்தன் (கொல்கத்தா), பின்னபனி சான்ஸ்குரித்திகா அனுஸ்தான்(கட்டாக்)
  • பங்கிம் குமார் பால் நினைவு இசை மாநாடு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_அகமது_உசேன்_கான்&oldid=2752685" இலிருந்து மீள்விக்கப்பட்டது