உள்ளடக்கத்துக்குச் செல்

அலினா கோர்லோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலினா கோர்லோவா
2021 கிராசிங் ஐரோப்பா திரைப்பட விழாவில் கோர்லோவா
தாய்மொழியில் பெயர்Алі́на Едуа́рдівна Го́рлова
பிறப்பு1992
சப்போரியா நகரம்
படித்த கல்வி நிறுவனங்கள்கெய்வ் தேசிய ஐ. கே. கார்பென்கோ-கேரி நாடகம், திரைப்படம், தொலைக்காட்சிப் பல்கலைக்கழகம்
பணிதிரைப்படப படைப்பாளி

அலினா எட்வர்டிவ்னா கோர்லோவா Alina Eduardivna Gorlova, உக்ரைனியன்: Алі́на Едуа́рдівна Го́рлова 1992) என்பவர் ஒரு உக்ரேனிய திரைப்படப் படைப்பாளி, இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். குறிப்பாக இவர் ஆவணப்படங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் 2017 இல் உக்ரேனிய திரைப்பட அகாதமியில் சேர்க்கப்பட்டார். மேலும் 2021 இல் உக்ரைனின் மதிப்பிற்குரிய கலைஞர் என்ற பட்டம் பெற்றார்.[1]

கல்வி[தொகு]

கோர்லோவா 2008 முதல் 2012 வரை கெய்வ் தேசிய ஐ. கே. கார்பென்கோ-கேரி நாடகம், திரைப்படம், தொலைக்காட்சிப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.[2]

திரைப்படவியல்[தொகு]

 • 2012: தி பஸ்ட் ஸ்டெப் இன் தி கிளவுட்
 • 2014: பாபுஷ்கா
 • 2016: கோலோட்மி யார் இன்ரோ
 • 2017: இன்விசிபில் பட்டாலியன், ஆவணப்படம், இரினா சிலிக் மற்றும் ஸ்வெட்லானா லிஷ்சின்ஸ்காவுடன் இணைந்து இயக்கபட்டது
 • 2018: நோ அப்வியஸ் சைன்ஸ், ஆவணப்படம் (டாக் ஜியுங் பின்னணி இசையமைத்தது)
 • 2020: திஸ் ரெயின் வில் நெவர் ஸ்டாப், ஆவணப்படம்

அங்கீகாரம்[தொகு]

2013-பர்னாலில் நான்காவது சர்வதேச எழுத்தாளர் திரைப்பட விழா "சினி-லைசியம்": சிறந்த கதைக்கான சில்வர் ஜீன்-லூக் "சொற்களின் சக்தி" விருது.[3]

2018 - டோக் லீப்ஜிக் சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவில் எம். டி. ஆர்-மிட்டல்டுட்ஷர் ருண்ட்ஃபங்க் சேனலின் நடுவர் குழுவானது "தேர் ஆர் நோ விசபல் சைன்ஸ்" திரைப்படத்தை "சிறந்த கிழக்கு ஐரோப்பிய திரைப்படம்" என்ற விருதை வழங்கி கௌரவித்தது.[4]

2020-தயாரிப்பாளர் மாக்சிம் நகோனெக்னி மற்றும் இயக்குனர் அலினா கோர்லோவா ஆகியோரின் "திஸ் ரெயின் வில் நெவர் ஸ்டாப்" திரைப்படம் புளோரன்சில் நடந்த திருவிழா டீ போபோலியில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.[5][6]

2021 – அயர்லாந்தின் 66வது கார்க் சர்வதேச திரைப்பட விழாவில் "திஸ் ரெயின் வில் நெவர் ஸ்டாப்" திரைப்படம் சிறந்த திரைப்படப்பண்பு வாய்ந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.[7]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Указ Президента України" [Decree of the President of Ukraine] (in உக்ரைனியன்). President of Ukraine. 11 September 2021. Archived from the original on 5 February 2022. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
 2. "Аліна Горлова" [Alina Gorlova]. screenplay.com.ua (in உக்ரைனியன்). Archived from the original on 28 February 2022. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
 3. Четвертий міжнародний фестиваль авторського кіно «Кінолікбез» பரணிடப்பட்டது 2018-09-29 at the வந்தவழி இயந்திரம்
 4. "Український фільм отримав нагороду кінофестивалю в Лейпцігу". Archived from the original on 2018-11-06. பார்க்கப்பட்ட நாள் 2018-11-05.
 5. "Українська документалка "Цей дощ ніколи не скінчиться" перемогла на фестивалі у Флоренції". 24 November 2020. Archived from the original on 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
 6. This Rain Will Never Stop named Best Feature at the Festival dei Popoli பரணிடப்பட்டது 2020-11-29 at the வந்தவழி இயந்திரம் cineuropa.org
 7. "Стрічка "Цей дощ ніколи не скінчиться" отримала нагороду за найкращий документальний фільм на 66-му Міжнародному кінофестивалі в Корку (Ірландія". Archived from the original on 2021-12-14. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலினா_கோர்லோவா&oldid=3911629" இலிருந்து மீள்விக்கப்பட்டது