உள்ளடக்கத்துக்குச் செல்

இரினா சிலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரினா சிலிக்
தாய்மொழியில் பெயர்Ірина Цілик
பிறப்பு18 நவம்பர் 1982 (1982-11-18) (அகவை 41)
கீவ், உக்ரைன்
தேசியம்உக்ரைனியர்
படித்த கல்வி நிறுவனங்கள்திரையரங்கு, ஒளிப்பதிவு, தொலைக்காட்சிகான தேசிய பல்கலைக்கழக
பணிஎழுத்தாளர், திரைப்பட படைப்பாளி
வாழ்க்கைத்
துணை
ஆர்ட்டெம் செக்

இரினா சிலிக் ( Iryna Tsilyk, (உக்குரேனிய மொழி: Ірина Цллина; பிறப்பு 18 நவம்பர் 1982) என்பவர் உக்ரைனிய திரைப்படப் படைப்பாளி மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் ஐரோப்பிய திரைப்பட அகாதமி மற்றும் உக்ரைனியன் பென் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் உறுப்பினர் ஆவார். இவர் 2020 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் "தி எர்த் இஸ் ப்ளூ அஸ் அன் ஆரஞ்சு" படத்திற்காக "டைரக்டரி அவார்ட் : வேல்ட் சினிமா டாக்குமன்டரி" விருதைப் பெற்றார்.

வாழ்க்கை வரலாறும் தொழிலும்

[தொகு]

இரினா சைலிக் உக்ரைன் நாட்டின் கியேவில் பிறந்தார். கியேவில் உள்ள திரையரங்கு, ஒளிப்பதிவு, தொலைக்காட்சிகான தேசிய பல்கலைக்கழகத்தில் இவான் கார்பென்கோ-கேரி சும்மா கம் லாட் என்ற பெயரில் பட்டம் பெற்றார். அதன் பிறகு தற்போதுவரை இரினா திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பெரும்பாலும் விருது பெற்ற படங்களான " தி எர்த் ஈஸ் புலூ ஏஸ் ஆன் ஆரஞ்சு " (பூமி ஒரு ஆரஞ்சு போல நீலமானது) , " ராக் , பேப்பர் , கிரானைட் " (பாறை, காகிதம், கையெறி குண்டு), " இன்விசிபல் பட்டாலியன் (கண்ணுக்கு தெரியாத பட்டாலியன்) போன்றவற்றில் பணிபுரிந்துள்ளார்.

மேலும், சைலிக் பல நூல்களை (கவிதை, உரைநடை, குழந்தைகளுக்கான புத்தகங்கள்) எழுதியுள்ளார். இவரது சில படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, போலந்து, லிதுவேனியன், செக், ருமேனியன், கற்றலான், ஸ்வீடிஷ், கிரேக்கம், இத்தாலியன், டேனிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன . ஜீப்ரா கவிதை திரைப்பட விழா , லெட்பரி கவிதை விழா , போசிஃபெஸ்டிவல் பெர்லின் , விலெனிகா சர்வதேச இலக்கிய விழா போன்ற பல்வேறு சர்வதேச இலக்கிய விழாக்கள் , பிராக், வியன்னா, லீப்ஜிக், பிராங்பேர்ட், வில்னியஸ் போன்ற பிற புத்தகக் கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் இடங்களில். போன்ற பல்வேறு சர்வதேச இலக்கிய விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் கௌரவிக்கப் பட்டுள்ளது.

2020 நவம்பரில் உக்ரேனிய ஜனாதிபதி வலோதிமிர் செலேன்சுக்கி இவருக்கு உக்ரைனின் சிறந்த கலைஞர் என்ற பட்டத்தை வழங்குவதாக அறிவிக்கபட்டது.[1] அதற்கு இவர் "திரைப்பட இயக்கத்தில் எனது வாழ்க்கையை இப்போதுதான் தொடங்குகிறேன்" மேலும் " தற்போதைய அரசாங்கத்தின் அநீதியான நடவடிக்கைகளால் திரையுலகைச் சேர்ந்த எனது சக ஊழியர்கள் பலர் மனம் புண்பட்டிருக்கும் நிலையில், நிச்சயமற்ற இந்தச் சூழ்நிலையில் இதுபோன்ற விருதுகளை மகிழ்ச்சியான மனதுடன் ஏற்றுக்கொள்வது பொருத்தமற்றது." என்று கூறி விருதை ஏற்க மறுத்துவிட்டார்.[1] சில நாட்களுக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து சிலிக்கிற்கு பட்டம் வழங்கிய ஆணை நீக்கபட்டது.[1]

ஐரினா சிலிக் தனது குடும்பத்துடன் கியேவில் வசிக்கிறார். இந்த நேரத்தில், இரினாவின் கணவரான எழுத்தாளர் ஆர்டெம் செக் உக்ரேனிய ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். இரினாவும் இவர்களது மகன் ஆண்ட்ரியும் (2010 இல் பிறந்தவர்) கியேவில் தங்கியுள்ளனர். [மேற்கோள் தேவை]

திரைப்படங்கள்

[தொகு]
  • Rock. Paper. Grenade ("Я і Фелікс"; fiction film, 90'). இந்தப் படம் 2022 இல் வார்சா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது).
  • The Earth Is Blue as an Orange (Земля блакитна, ніби апельсин; documentary film, 74', 2020). இந்தத் திரைப்படம் 2020 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு "இயக்குதல் விருது: உலக சினிமா ஆவணப்படம்" என்ற விருதைப் பெற்றது. இப்படத்தின் ஐரோப்பிய பிரீமியர் 2020 பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் நடைபெற்றது. மேலும், Docudays UA சர்வதேச மனித உரிமைகள் ஆவணத் திரைப்பட விழா 2020இல் இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றது. அதிகாரப் பூர்மவாக நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேஉம் இப்படம் கோபன்ஹேகன் சர்வதேச ஆவணப்பட விழா, ஹாட் டாக்ஸ் கனடியன் சர்வதேச ஆவணப்பட விழா, கிளீவ்லேண்ட் சர்வதேச திரைப்பட விழா, தெசலோனிகி ஆவணப்பட விழா, இசட்.ஐ.என்.இ.பி.ஐ - சர்வதேச ஆவணப்படம் மற்றும் பில்பாவோவின் குறும்பட விழா போன்ற 100க்கும் மேற்பட்டவை சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
  • Tayra ("Тайра"; short documentary film, 10', 2017) and Kid ("Малиш"; short documentary film, 15', 2017) for the cinema-almanac "Invisible Battalion".
  • Home (Дім; short fiction film). 12', 2016. ஒடேசா சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது (உக்ரைன், 2016).
  • Commemoration (Помин; short fiction film). 24', 2012. மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் எக்குமெனிகல் ஜூரியின் பரிசு பெற்றது
  • Blue Hour (Вдосвіта; short fiction film). 10', 2008.

வெளியீடுகள்

[தொகு]

கவிதைகள்

[தொகு]
  • Depth of Field (Глибина різкості; collection of poems), 2016.
  • Qi (Ці; collection of poems), 2007.

உரைநடை

[தொகு]
  • Red Marks on Black (Червоні на чорному сліди; short story collection), 2015.
  • Birthmarks (Родимки; short story collection), 2013.
  • The Day After Yesterday (Післявчора; novel), 2008.

சிறுவர் நூல்கள்

[தொகு]
  • The City-tale of One’s Friendship (МІСТОрія однієї дружби; children’s adventure novel), 2016.
  • Such an interesting life (Таке цікаве життя; children’s book), 2015.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரினா_சிலிக்&oldid=3907866" இலிருந்து மீள்விக்கப்பட்டது