அறுவகை இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறுவகை இலக்கணம் ஒரு தமிழ் இலக்கண நூல். தொல்காப்பியத்தில் மூன்றிலக்கணமாகச் சொல்லப்பட்ட இயற்றமிழ், பிற்காலத்து நூல்களில் ஐந்திலக்கணம் ஆனது. இந்நூலில் ஆறாவது இலக்கணமும் ஒன்று சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் இது அறுவகை இலக்கணம் என்னும் பெயரைப் பெற்றது. வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் என்பவர் இந்நூலை இயற்றினார். 1839 ஆம் ஆண்டு முதல் 1898 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் இவர்[1].

அமைப்பு[தொகு]

எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்னும் வழமையான ஐந்து இலக்கணங்களுடன் ஆறாவதாகப் புலமை இலக்கணம் என்பதும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 799 பாடல்களைக் கொண்ட இந்நூலில் முதலில் 12 பாடல்களைக் கொண்ட காப்பும், பாயிரமும் அமைந்துள்ளன. நூலின் இறுதியில் ஒரு கலித்துறைப்பா அமைந்துள்ளது. நூல் மட்டும் 786 பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு வகை இலக்கணத்துக்குமாக பின்வருமாறு பாடல்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது:

  1. எழுத்திலக்கணம் - 165
  2. சொல்லிலக்கணம் - 112
  3. பொருளிலக்கணம் - 122
  4. யாப்பிலக்கணம் - 134
  5. அணியிலக்கணம் - 109
  6. புலமையிலக்கணம் - 144

குறிப்புகள்[தொகு]

  1. இளங்குமரன், இரா., 2009. பக். 412.

உசாத்துணைகள்[தொகு]

  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
  • நாகராசன், ப. வெ. (பதிப்பும், உரையும்), வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுவகை_இலக்கணம்&oldid=688084" இலிருந்து மீள்விக்கப்பட்டது