ஐந்திலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் இலக்கணத்தில் ஐந்திலக்கணம் இலக்கணத்தின் ஐந்து பெரும் பிரிவுகளையும் ஒருங்கே குறிக்கும் சொல்லாகும். தொல்காப்பியர் காலத்தில் இயற்றமிழ் மூன்று பெரும் பிரிவுகளாகவே இருந்தது. அவை எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்பன. தமிழில் இலக்கியத்தின் பெரு வளர்ச்சியினால், பொருளதிகாரத்தில் அடங்கும் விடயங்களும் பெருகலாயின. இறையனார் அகப்பொருள் எழுந்த காலத்தில் பொருளிலக்கணத்தில் அடங்கியிருந்த யாப்பிலக்கணம் தனிப்பிரிவானது. பின்னர் அணியிலக்கணமும் தனிப்பிரிவாக வளரத்தொடங்கியது. யாப்பிலக்கணத்துக்கும், அணியிலக்கணத்துக்கும் தனித்தனி நூல்களும் கூட எழலாயின[1].

ஐந்திலக்கண நூல்கள்[தொகு]

இலக்கணப் பரப்பு விரிவடைந்ததைத் தொடர்ந்து பிற்காலத்தில் எழுந்த இலக்கண நூல்கள் பல, குறித்த சில இலக்கணப் பிரிவுகளை மட்டுமே கூறுவனவாக அமைந்தன. ஐந்து இலக்கணங்களையும் தனித்தனிப் பிரிவுகளாக ஒருங்கே எடுத்தாண்ட முதல் நூல் வீரசோழியம் ஆகும். கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூல் பெரிதும் வடமொழி இலக்கண மரபைத் தழுவியே அமைந்திருந்தது. சோழர் ஆட்சிக் காலத்தின் போது ஏற்பட்ட பெருமளவிலான வடமொழிச் செல்வாக்கே இதற்குக் காரணமாகும். இதன் பின்னர் பல ஐந்திலக்கண நூல்கள் காலந்தோறும் இயற்றப்பட்டன. அவற்றுள் இன்று அறியப்படுவன கீழ்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளன:

குறிப்புகள்[தொகு]

  1. இளங்குமரன், இரா.

உசாத்துணைகள்[தொகு]

  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
  • சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்து வீரியம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்திலக்கணம்&oldid=2289752" இருந்து மீள்விக்கப்பட்டது