அறிக்கை அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓர் அறிக்கை அட்டை (Report card) அல்லது பிரித்தானிய ஆங்கிலத்தில் முன்னேற்ற அறிக்கை, சாதனை அறிக்கை என்பது ஒரு மாணவரின் கல்வி ரீதியிலான செயல்திறனைத் தெரிவிக்கிறது. பெரும்பாலாக, ஆண்டுக்கு ஒருமுறை முதல் நான்கு முறை பள்ளி மாணவருக்கு அல்லது மாணவரின் பெற்றோருக்கு அறிக்கை அட்டை வழங்கப்படுகிறது. ஒரு பொதுவான அறிக்கை அட்டை, ஒரு மாணவரின் பள்ளிச் செயல்பாடுகளின் தரத்தை தீர்மானிக்க ஒரு தர அளவைப் பயன்படுத்துகிறது. அறிக்கை அட்டைகள் தற்போது கணினிகள் மூலம் தானியங்கு வடிவில் வழங்கப்படுகின்றன மற்றும் சில சமயங்களில் அஞ்சல் மூலமும் அனுப்பப்படலாம். பாரம்பரிய பள்ளி அறிக்கை அட்டைகளில் மாணவர்களின் பணி மற்றும் நடத்தை பற்றிய தனிப்பட்ட கருத்துகளை ஆசிரியர்கள் பதிவு செய்ய குறிப்புகள் எனும் பகுதி உள்ளது.

"அறிக்கை அட்டை" என்ற சொல், ஏதேனும் ஒரு முறையான பட்டியல் மற்றும் மதிப்பீட்டை விவரிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்கள் பள்ளிகளின் செயல்திறன் குறித்த அறிக்கை அட்டைகளை அவற்றின் கல்வித் துறைகள் மூலம் வழங்குகின்றன. அரசியல் எடுத்துரைத்தல் குழுக்கள் பெரும்பாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது "அறிக்கை அட்டைகளை" வழங்குவார்கள், பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடுகளின் அடிப்படையில் அவர்களை "தரப்படுத்துதல்" செய்வார்கள்.

புவியியல் பகுதி வாரியாக அறிக்கை அட்டைகள்[தொகு]

முன்னாள் யூகோஸ்லாவியா[தொகு]

முன்னாள் யூகோஸ்லாவியாவில், அறிக்கை அட்டைகளில் அந்த முழு ஆண்டிற்கான தரங்களும், மாணவரின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் கல்வி சார் சாதனைகளும் அடங்கியிருக்கும்.

ஐக்கிய இராச்சியம்[தொகு]

ஐக்கிய இராச்சிய மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டிற்கு ஒரு முறை எழுத்துப்பூர்வமான அறிக்கை அட்டைகள் வழங்கப்படுகின்றன. பொது மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு புதிய தரநிலை அறிக்கை முறையில் A* இலிருந்து G வரை அல்லது U- 9 முதல் 1 வரை [1] வழங்கப்படுகிறது. 2010இல் அனைத்துப் பெற்றோர்களுக்கும் அறிக்கை அட்டை கிடைக்கும் வகையில் மின்னணு தரப் புத்தகமாக கிடைக்க வேண்டும் என்ற தேவையை ஏற்படுத்தியது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "GCSE 9 to 1 grades". 6 August 2019.
  2. Lucy Tobin (27 April 2010). "Online school reports soon to be compulsory". தி கார்டியன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிக்கை_அட்டை&oldid=3787456" இலிருந்து மீள்விக்கப்பட்டது