அர்மீனா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அர்மீனா ராணா கான் ( ஆங்கிலம் : Armeena Khan ) இவர் ஒரு பாக்கித்தானிய கனடிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகையாவார். பாக்கித்தானின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான இவர் லக்ஸ் ஸ்டைல் விருது, ஹம் விருது மற்றும் நிகர் விருது போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் பெரும்பாலும் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இதன் மூலம் அர்மீனா கான் உருது பொழுதுபோக்கு துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.[1] 2016 ஆம் ஆண்டில், ஈஸ்டர்ன் ஐ என்ற செய்தி நிறுவனம் அவரை "50 கவர்ச்சியான ஆசிய பெண்களில்" ஒருவராக பெயரிட்டது, அடுத்த ஆண்டு, அவருக்கு பாக்கித்தான் சாதனை விருதுகளில் பெண்கள் அதிகாரமளித்தல் விருது வழங்கப்பட்டது.

தொழில்[தொகு]

பாகிஸ்தான் பெற்றோருக்கு டொராண்டோவில் பிறந்த கான், மான்செஸ்டரில் வளர்ந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கான் சில மாதங்கள் ஒரு விளம்பர நடிகையாக பணியாற்றினார், பின்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ரைத்தே என்ற பிரித்தன் குறும்படத்தின் மூலம் அறிமுகமானார். பாக்கித்தானிலிருந்து வந்து இந்த விழாவில் பங்கேற்ற முதல் நடிகையாவார். காதல் தொலைக்காட்சித் தொடரான முஹாபத் அப் நஹி ஹுகி (2014) இல் ஒரு எதிர்மறை பாத்திரத்த்தில் நடித்ததன் மூலம் முக்கியத்துவம் பெற்றார், ஹம் விருதுகளில் சிறந்த எதிர்மறைப் பாத்திரம் என்ற பரிந்துரையைப் பெற்றார்.

காதல் தொடரான இஷ்க் பராஸ்ட் (2015) மற்றும் கார்ப் (2015) ஆகியவற்றில் அவர் நடித்ததற்காக பரவலான விமர்சனங்களைப் பெற்றார். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், பின் ராய் அன்சூ புதினத்தின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தழுவலில் அவர் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண் வேடத்தில் நடித்தார், முன்னாள் சிறந்த துணை நடிகைக்கான லக்ஸ் ஸ்டைல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் . காதல் நகைச்சுவைப்படமான ஜனான் மற்றும் போர்த்திரைப்படமான யால்கர் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து உருது திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், இவை இரண்டும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த பாக்கித்தான் படங்களில் ஒன்றாகும் .

காதல் தொலைக்காட்சித் தொடரான ராஸ்ம் ஈ துனியா (2017) என்றப்படத்தில் முக்கோண காதலில் சிக்கிய ஒரு பெண்ணையும், ஹம் தொலைக்காட்சியா தயாரிக்கப்பட்ட சமூகப்படமான டால்டால் (2017) என்றப் படத்தில் பதற்றமான மனைவியாக சித்தரித்ததற்காக கான் ஒருமனதாக பாராட்டுக்களைப் பெற்றார்.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

கான் 1987 மார்ச் 30 அன்று டொராண்டோவின் ஒன்ராறியோவில் பாக்கித்தான் பெற்றோருக்குப் பிறந்தார். அவரது தந்தை ஒரு தொழிலதிபர், மற்றும் அவரது தாய் ஒரு இல்லத்தரசி ஆவார். ஒரு மூத்த மற்றும் ஒரு இளைய சகோதரிகளென இருவர் உள்ளனர். கான் பஷ்டூன் மற்றும் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர்.[4]

அவர் டொராண்டோவில் தனது பள்ளிப் படிப்பைச் முடித்தார், இருப்பினும், குடும்பம் பின்னர் மான்செஸ்டருக்கு இடம் பெயர்ந்தபோது அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்றார், வணிக நிர்வாகத்தில் கௌரவ பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஈலிங் ஸ்டுடியோஸ் மற்றும் பைன்வுட் ஸ்டுடியோவில் முறை நடிப்பைப் படித்தார். இவரது கூற்றுப்படி, இவர் பாக்கித்தான் மற்றும் கனடாவின் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ளார். கான் ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் சரளமாக உள்ளார். மேலும் அரபு மொழியை இவரால் படிக்க முடியும்.

நடிகையாக மாறுவதற்கு முன்பு கான் 2010 இல் விளம்பரங்களில் தோன்றினார். இந்த நேரத்தில், அவர் நிசாத் லினன், பெசில் வங்கி மற்றும் ஸ்பிரைட் உட்பட பல்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களில் தோன்றினார். அவர் பாக்கித்தான் மற்றும் பிரித்தனில் ஒரு பிரபலமான விளம்பர நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், விரைவில் திரைப்பட வேடங்களுக்கான வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார்.[5][6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிரித்தனில் வாழும் பாக்கித்தான் தொழிலதிபர் ஃபெசில் கானுடனான தனது திருமண நிச்சயதார்த்தத்தை ஜூலை 2017 இல் ட்விட்டரில் கான் அறிவித்தார்.[2] அதே ஆண்டு, கியூபா கடற்கரையில் ஃபெசில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதாக கான் தெறிவித்தார்.[7][8]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்மீனா_கான்&oldid=2868484" இருந்து மீள்விக்கப்பட்டது