உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ஜினூசி சமர்

ஆள்கூறுகள்: 39°02′N 26°48′E / 39.033°N 26.800°E / 39.033; 26.800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ஜினூசி சமர்
பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கிமு 406
இடம் அர்ஜினூசி தீவுகள்
39°02′N 26°48′E / 39.033°N 26.800°E / 39.033; 26.800
ஏதெனியன் வெற்றி
பிரிவினர்
எசுபார்த்தா ஏதென்சு
தளபதிகள், தலைவர்கள்
Callicratidas   8 இணையான ஸ்ரடிகெஸ்:
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Aegean" does not exist.

அர்ஜினூசி கடற்படை சமர் (Battle of Arginusae) என்பது கிமு 406 இல் பெலோபொன்னேசியன் போரின் போது நடந்த கடற் சமராகும். இந்த சமரானது லெஸ்போஸ் தீவின் கிழக்கே அர்ஜினூசே தீவுகளில் உள்ள கேனே நகருக்கு அருகில் நடந்தது. போரில், எட்டு ஸ்ரடிகெசுகளின் தலைமையிலான ஏதெனியன் கடற்படையானது காலிக்ராடிடாசின் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையைத் தோற்கடித்தது. முந்தைய போரில் எசுபார்தன்கள் பெற்ற வெற்றியால் ஏதெனியர்கள் இந்தப் போருக்காக துரிதமாக செயல்பட்டனர். கோனானின் தலைமையின் கீழ் ஏதெனியன் கடற்படை மிட்டிலீனில் முற்றுகையிடப்பட்டது; கோனானை விடுவிப்பதற்காக, ஏதெனியர்கள் அவசரமாக படையை உருவாக்கினர். இதற்காக புதிதாக கப்பல்கள் கட்டப்பட்டன. இதற்காக கோயில் உண்டியல் பணம்கூட எடுக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்தைக் காக்க எல்லாவித தியாகத்துக்கும் ஏதெனியர்கள் சித்தமாக இருந்தனர். புதிதாக கட்டப்பட்ட கப்பல்கள் அனுபவமற்ற பணியாளர்களால் இயக்கப்படுவதாக இருந்தது. இந்த அனுபவமற்ற கடற்படையானது தந்திரோபாய ரீதியாக எசுபார்த்தன்களை விட மாற்றுகுறைந்ததாக இருந்தது. ஆனால் அதன் தளபதிகள் புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான தந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த குறைபாட்டைத் தவிர்த்தனர். இதனால் ஏதெனியர்கள் வியத்தகு, எதிர்பாராத வெற்றியைப் பெற்றனர். போரில் ஈடுபட்ட அடிமைகள், மெட்டிக்குகள் போன்றோருக்கு ஏதெனியன் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கலாம்.

வெற்றி செய்தியை ஏதென்சு மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டது. எவ்வாறாயினும், போருக்குப் பிறகு நடந்தவைகளால் அவர்களின் மகிழ்ச்சி குறைந்தது. போரில் சேதமுற்ற அல்லது முழுகிய 25 ஏதெனியன் கப்பல்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களை மீட்க கப்பல்கள் அனுப்பபட்டன. ஆனால் திடீரென்று புயல் வீசியது. இதனால் மீட்புப் பணி தடைபட்டது. மேலும் ஏராளமான மாலுமிகள் நீரில் மூழ்கினர். ஏதென்சில் பொதுமக்களுக்கு இது தெரியவந்ததும் அவர்கள் மத்தியில் கோபம் வெடித்தது. இதனால் கடற்படை தளபதிகள் ஏதென்சுக்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டனர். சட்டசபையில் கடும் விசாரணைக்குப் பிறகு அர்ஜினூசி சமரில் தலைமை வகித்த எட்டு தளபதிகளுமே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆறு பேருக்கு மரண தண்டனை உடனே நிறைவேற்றப்பட்டது. இருவர் விசாரணைக்கே வரவில்லை. சில காலம் கழித்து சட்டசபை தன்னுடைய இந்த செயலுக்காக மிகவும் மனம் வருந்தியது.

இதற்கிடையில், எசுபார்த்தாவில், காலிக்ராட்டிடாசை ஆதரித்த பாரம்பரியவாதிகள், ஏதென்சுடன் அமைதி உடன்பாடு மேற்கொள்ள அழுத்தம் கொடுத்தனர். போர் தொடர்ந்தால் தங்கள் எதிரியான லைசாந்தர் மீண்டும் பொறுப்புக்கு வர வழிவகுக்கும் என்பதை அறிந்து அமைதி உடன்பாட்டுக்கு அழுத்தம் தந்தனர். இந்த பிரிவினரின் கோரிக்கை எசுபார்த்தாவில் ஏற்கப்பட்டது. அதன்படி ஒரு தூதுக்குழு ஏதென்சுக்கு அமைதி உடன்பாடு காண அனுப்பப்பட்டது; இருப்பினும், ஏதெனியர்கள் இந்த வாய்ப்பை நிராகரித்தனர். இதனால் லைசாந்தர் ஏஜியன் கடற் பகுதிக்கு புறப்பட்டு கடற் போருக்கு தலைமை தாங்கினார். இதன் பிறகு ஒரு ஆண்டுக்குள் ஈகோஸ்ப்போடாமி சமரில் அவர் வெற்றியை ஈட்டி போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜினூசி_சமர்&oldid=3441025" இலிருந்து மீள்விக்கப்பட்டது