அர்ஃபா கானும் செர்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ஃபா கானும் செர்வானி
பிறப்பு1 நவம்பர் 1980 (1980-11-01) (அகவை 43)
புலந்ஷஹ்ர், உத்தர பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அலிகார் முஸ்லிம் பல்கலைகழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய
பணிபத்திரிக்கையாளர், செய்தி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது வரை
அறியப்படுவதுஆஃப்கானிஸ்தான் தேர்தல் செய்திகளை சேகரித்தார்.
விருதுகள்Sahitya Samman Award, Red Ink Award, Chameli Devi Jain Award for Outstanding Women Mediapersons

அர்ஃபா கானும் செர்வானி (பிறப்பு 1980 ஆம் ஆண்டு நவம்பர் 1) ஓர் இந்திய பத்திரிகையாளர்.[1] 2014 ஆம் ஆண்டு ஆப்கானிய ஜனாதிபதித் தேர்தல் பற்றிய செய்திகளை சேகரித்து வழங்கிய ஒரே இந்திய பத்திரிகையாளர் இவர் தான்.[2] இவருக்கு ரெட் இன்க் விருது, இந்தி அகாடமியின் சாகித்ய சம்மன் விருது மற்றும் சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சாமேலி தேவி ஜெயின் விருது வழங்கப்பட்டுள்ளது.[3][4] இவர் தற்போது தி வயரில் என்ற இணையத்தள பத்திரிக்கையில் மூத்த ஆசிரியராக உள்ளார்.[5]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அர்ஃபா 1980 ஆம் ஆண்டு நவம்பர் 1, அன்று உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்ஷாரில் பிறந்தார். இடைநிலை படிப்பை சொந்த ஊரிலே முடித்து பின்இளங்கலை படிப்பில் அறிவியல் மீரட்டில் உள்ள சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிறகு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கைத் துறையில் டிப்ளோமா பெற்றார். ஜாமியா மில்லியா இஸ்லாமியாவிலிருந்து முனைவர் பட்ட படிப்பை முடித்தார்.[6]

தொழில்[தொகு]

அர்ஃபா 2000 ஆம் ஆண்டில் பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[6] இவர் தி பயனியரில் ஒரு பயிற்சி பத்திரிகையாளராக சேர்ந்தார். பின்னர் இவர் ஏசியன் ஏஜ் பின்னர் சஹாரா டிவி யிலும் பணியாற்றினார். பிறகு இவர் என்டிடிவியில் முதன்மை நிருபராகவும், செய்தி தொகுப்பாளராகவும் பணி புரிந்தார்.[7] இவர் 2017 வரை மாநிலங்களவை டிவியில் பணிபுரிந்தார் [8] தற்போது தி வயரில் மூத்த ஆசிரியராக உள்ளார் . [5]

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 குறித்து இவர் ஆற்றிய உரையில் இருந்து 42 வினாடி காணொளியை வெட்டி திரித்து இவர் மீது அவதூறுகள் பரப்பட்டது. இதுகுறித்து அர்ஃபா சிபிஜேவில் பேசும்போது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் தனக்கு கொலை மிரட்டல் மற்றும் கற்பழிப்பு அச்சுறுத்தல்கள் வந்ததாக தெரிவித்திருந்தார்.[9][10]

விருதுகள்[தொகு]

  • சிறந்த பெண்கள் ஊடகவியலாளர்களுக்கான சாமேலி தேவி ஜெயின் விருது - 2019[11]
  • சாகித்ய சம்மன் [4]
  • ரெட் இன்க் விருது [12]

குறிப்புகள்[தொகு]

  1. "مسلمانوں کی وجہ سے بھارت میں برقرار ہے سیکولرزم۔آئین کا تحفظ سبھی کیلئے ضروری : عارفہ خانم شیروانی". Millat Times | A Leading Urdu English, Hindi News Portal and YouTube Channel. 2019-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  2. "Arfa Khanum, Author at SAWM". SAWM (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  3. "Journalists Rohini Mohan, Arfa Khanum Sherwani awarded Chameli Devi Jain award". The News Minute (in ஆங்கிலம்). 2020-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  4. 4.0 4.1 "About Arfa Khanum Sherwani". Ted. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
  5. 5.0 5.1 "2 get Chameli Devi Jain Award for outstanding woman journalist". OutlookIndia.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020.
  6. 6.0 6.1 "بلند شہر کی شیرنی عارفہ خانم شیروانی بیباک، بہادراورآزاد خاتون صحاف". UrduCity.in. Archived from the original on 27 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Collective stereotypes". SabrangIndia (in ஆங்கிலம்). 2010-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  8. Staff, J. K. R. (2018-06-10). "Anger after Rajya Sabha TV addresses RSS chief Mohan Bhagwat as 'His Holiness'". Janta Ka Reporter 2.0 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  9. "Global Scribes' Body Asks BJP Leaders to Stop Online Harassment of The Wire's Arfa Khanum Sherwani". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  10. Desk, Alt News (2020-01-27). "Journalist Arfa Khanum's speech on CAA shared with distorted interpretation by BJP office-bearers". Alt News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  11. Team, N. L. "Rohini Mohan and Arfa Khanum Sherwani win the Chameli Devi Jain Award for outstanding woman journalists". Newslaundry (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  12. "Okhlatimes.com". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஃபா_கானும்_செர்வானி&oldid=3927232" இலிருந்து மீள்விக்கப்பட்டது