அரை-இழுபட்ட நிலை (சுடுகலன்)

அரை-சுத்தி / அரை-இழுபட்ட நிலை (Half-cock) என்பது, சுடுகலனுடைய சுத்தியல்— முழுதுமாக அல்லாமல்— பாதி அளவிற்கு இழுக்கப்படிருக்கும் நிலையே ஆகும். பல சுடுகலன்கள், குறிப்பாக பழைய சுடுகலன்களின், அரை-இழுபட்ட நிலையை அடைய, சுத்தியலில் ஒரு காடி வெட்டப்பட்டிருக்கும். இந்த நிலையானது, வெடியூசி- பூட்டிய சுத்தியலை தட்டும் மூடி அல்லது வெடிபொதியின் மீதும் படவிடாது; துப்பாக்கியையும் வெடிக்க விடாது. அரை-இழுபட்ட நிலையை பயன்படுத்துவதன் நோக்கம்; சுடுகலனில் குண்டேற்றுவதற்காக, அல்லது பாதுகாப்பு அம்சமாக, அல்லது இவை இரண்டிற்காகவும் கூட இருக்கலாம்.[1][2]
முற்கால உதாரணங்கள் [தொகு]

1. வெடித்த அடுத்த கணத்தில் ஆயுதம்.
2. வெடிபொதியை இடுவதற்கு திறக்கப்பட்டுள்ளது.
3. குண்டேற்றபாட்டு, அரை-சுத்தி நிலையில்.
முற்கால தீக்கல்லியக்கிகளின் கிண்ணியில், எரியூட்டியை இடுவதற்கு, அரை-இழுபட்ட நிலை தேவை பட்டது. கோல்ட் 1851 நேவி சுழல்துப்பாக்கி போன்ற, சிலவகை முற்கால சுழல்துமுக்கிகளில், சுத்தியலை அரை-இழுபட்ட நிலையில் வைத்தால் தான், உருள்கலனை சுற்றச்செய்து, அதில் குண்டேற்ற இயலும்.[3] இது போன்ற சுடுகலன்களில், இருக்கும் 6 அறைகளிலும் குண்டேற்றி, சுத்தியலை அரை-இழுபட்ட நிலையில் வைப்பதற்கு பதிலாக; வழக்கமான பாதுகாப்பு நோக்காமாக, ஆறில் 5 அறைகளில் மட்டும் குண்டேற்றப்பட்டு, இயல்பு-நிலை சுத்தியலை குண்டேற்றாத அறையில் வைப்பர்.[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Glossary". SAAMI. http://www.saami.org/Glossary/display.cfm?letter=H. பார்த்த நாள்: 11 June 2016.
- ↑ Voth, Al (11 January 2010). "Dropping the Hammer". Carbon Media Group. http://www.biggamehunt.net/articles/dropping-hammer. பார்த்த நாள்: 11 June 2016. "Any discussion about hammer guns and in what condition they are safe to carry invariably turns to the half-cock or safety notch."
- ↑ Hacker, Rick (24 September 2010). "Single-Action Secrets". Handguns (Outdoor Sportsman Group). http://www.handgunsmag.com/reviews/featured_handguns_single_091907/. பார்த்த நாள்: 11 June 2016.
- ↑ Campbell, Dave (22 April 2011). "How to Load a Single-Action Revolver". American Rifleman. https://www.americanrifleman.org/articles/2011/4/22/how-to-load-a-single-action-revolver/. பார்த்த நாள்: 12 June 2016. "This technique—load one, skip one, load the remaining chambers and come to full cock, then lower the hammer on an empty chamber—will work for any single-action revolver, regardless if it is a five-, six- or eight- or nine-shot cylinder."