அரு உருளிப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரு உருளிப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிலிண்ட்ரோபிலிடே
பேரினம்:
சிலிண்ட்ரோபிசு
இனம்:
சி. அருவென்சிசு
இருசொற் பெயரீடு
சிலிண்ட்ரோபிசு அருவென்சிசு
பவுலெஞ்சர், 1920

அரு உருளிப் பாம்பு (Aru cylinder snake)(சிலிண்ட்ரோபிசு அருவென்சிசு) என்பது இந்தோனேசியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2] இது சிலிண்ட்ரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[3]

விளக்கம்[தொகு]

அரு உருளிப் பாம்பு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். வெள்ளை குறுக்கு புள்ளிகளுடன் பின்புறத்தில் இரண்டு மாற்றுத் தொடர் வரிசைகளை உருவாக்குகின்றன. வயிற்றில் குறுக்கு பட்டைகள் உள்ளன. இவற்றில் சில முழுமையானவை, மற்றவை குறுக்கிடப்பட்டுள்ளன. இரண்டு பகுதிகள் மாறி மாறி, ஒரு இணை பெரிய வெள்ளை புள்ளிகள் கழுத்திலும் வாலின் கீழ்ப்பகுதி வெண் நிறத்திலும் காணப்படும்.

வயிற்றுச் செதில்கள் 24 வரிசைகளில் உள்ளன, ஆறு வாலடிச் செதில்கள் உள்ளன[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tallowin, O.; O'Shea, M.; Parker, F. (2022). "Cylindrophis aruensis". IUCN Red List of Threatened Species 2022: e.T42492681A217802106. doi:10.2305/IUCN.UK.2022-1.RLTS.T42492681A217802106.en. https://www.iucnredlist.org/species/42492681/217802106. பார்த்த நாள்: 13 August 2023. 
  2. "Cylindrophis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 17 August 2007.
  3. "Cylindrophis". Integrated Taxonomic Information System. Retrieved 17 August 2007.
  4. Boulenger, G.A. 1920. Description of Four new Snakes in the Collection of the British Museum. Annals and Magazine of Natural History, series 9, vol. 6, no. 31, pp. 108-111.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரு_உருளிப்_பாம்பு&oldid=3840185" இலிருந்து மீள்விக்கப்பட்டது