அரித்துவாரில் உள்ள இந்து சமய மரபியல் பதிவேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரித்துவாரில் உள்ள இந்து சமய மரபியல் பதிவேடுகள் (Hindu genealogy registers at Haridwar) என்பது அரித்துவாரில் தொழில்முறை மரபியல் வல்லுநர்களாகப் பணிபுரியும் 'பண்டா' என்று உள்நாட்டில் அழைக்கப்படும் பிராமணப் பண்டிதர்களால் பராமரிக்கப்படும் குடும்பங்களின் மரபுப் பதிவேடுகள் ஆகும். இது பல ஆண்டுகளாக ஆய்வுக்கு உட்பட்டவை. [1] பல சந்தர்ப்பங்களில், வாஹி அல்லது பாஹி என அழைக்கப்படும் இந்த மிகப்பெரிய பதிவுகள், பரம்பரை அல்லது சொத்து தகராறுகள் தொடர்பான சட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இந்த பதிவுகள் யாத்ரீகர்கள் மற்றும் பண்டாக்களால் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. [1] மேலும் பல பதிவுகள் குடும்ப வரலாற்றை, இருபதுக்கும் மேற்பட்ட முந்தைய தலைமுறைகளாக, பல நூற்றாண்டுகளாக நீண்டுள்ளது. [2]

இந்துக்களின் புனித யாத்திரைத் தளமான அரித்துவார், 1866 புகைப்படம்

அரித்துவார் பாரம்பரியமாக இந்துக்கள் மத்தியில் மரண சடங்குகள் மற்றும்சிரார்த்தம் போன்ற சடங்குகள் செய்யும் ஒரு தளமாக இருந்து வருகிறது. குடும்ப பண்டிதர்கள் குடும்பத்தின் ஒவ்வொருவர் வருகையையும், அவர்களின் கோத்திரம், குடும்ப மரம், திருமணங்கள் மற்றும் தற்போதுள்ள குடும்ப உறுப்பினர்கள், சொந்த ஊர் போன்றவற்றைப் பதிவு செய்வது விரைவில் வழக்கமாகிவிட்டது. பல நூற்றாண்டுகளாக, இந்த பதிவேடுகள் பல குடும்பங்களின் வரலாற்றைக் கண்டறிவதில், குறிப்பாக 1947 இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, பின்னர் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே ஒரு முக்கியமான பரம்பரை ஆதாரமாக மாறியது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Brahman pandas Divine Enterprise: Gurus and the Hindu Nationalist Movement, by Lise McKean, University of Chicago Press, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-56010-4. Page 151.
  2. Shoumatoff, Alex (13 May 1985). "The mountain of names". The New Yorker. p. 51. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.
  3. The Greatest Mela on Earth, the Kumbh at Haridwar Rediff.com, "Tiny temples, hardly larger than phone booths, dot every 100 metres of the ghats. As do the umbrella-shaded stalls, standing on stilts, of the pandas, who apart from conducting religious ceremonies can track down the genealogy of Hindu families from their centuries-old, long, yellowing registers. Little ceremonies -- blessing of coconuts, offering of flowers, money and sweets, lighting of the oil lamps -- take place along every inch of the ghats and probably have for aeons. Pandas, alms seekers, pandits and hawkers are posted every few yards ready to shake out a few coins or notes from every newcomer they spot. Can I trace your family tree or offer you advice?"
  4. Who Do You Think You Are? BBC, "Meera Syal's parents both originate from the farmlands of the Punjab, in north-west India. Her father, Surendra Syal, hails from a small village called Lasara. In India it is difficult to trace your ancestry through documents like birth certificates, in the way that you can in the United Kingdom, but instead Indian family records are kept at shrines in the country's many holy cities. It is in the ancient city of Haridwar, on the riverbanks of the Ganges, that a Hindu priest is responsible for preserving the genealogy of the Syals, in a book called a Bah. It was in this book that Meera found that the Syals have been living in Lasara for the past 250 years."

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]