அரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டு வரிசைப் பற்கள் ஒன்றன் குறுக்கே மற்றொன்றாகச் சாய்வாக அமைந்திருக்கும் இரட்டை வெட்டு அரத்தின் தோற்றம்

அரம் (File (tool)) என்பது கடினமான பரப்புக்களை அராவி மழமழப்பாக்க பயன்படும் ஒரு கருவியாகும் . இது மரவேலை, உலோக வேலை மற்றும் அதை ஒத்த பிற பணிகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான அரங்கள் செவ்வகம், சதுரம், முக்கோணம் வட்ட குறுக்குவெட்டு வடிவிலானதாக கடினமான எஃகுப் பட்டைகளால் ஆனது. அரத்தின் ஒரு முனையானது பொதுவாக கூர்மையாக இருக்கும். அந்தக் கூரான பகுதி கைப்பிடி பொருத்த ஏற்றதாக அமைகப்பட்டிருக்கும். [1]

தேய்ப்பரம் பல கூரிய பற்கள் இடைவிட்டு அமைக்கப்பட்டிருக்கும் ஒரு அர வடிவமாகும். இது பெரிய அளவிலான பொருட்களில் உள்ள கரடுமுரடாகன பகுதியை அகற்ற பயன்படுகிறது. [2]

இயற்கை அல்லது செயற்கை வைரத் துகள்கள் அல்லது சிலிக்கான் கார்பைடு போன்றவை தேய்பு மேற்பரப்பில் கொண்டுள்ளதான அரங்களும் உருவாக்கப்படுகின்றன. இவை எஃகு அரங்களைக் கொண்டு தேய்க்க ஏதுவாக இல்லாத பீங்கான் போன்ற பொருட்களை தேய்த்து மழமழப்பாக உதவுகிறது.

வரலாறு[தொகு]

ஆரம்பகால அரம் அல்லது தேய்ப்பரமானது வரலாற்றுக்கு முந்தைய வேர்களைக் கொண்டுள்ளது. கற்கோடரி போன்றவை வெட்டுதல் மற்றும் இயற்கை உராய்வுகளைப் பயன்படுத்தி உருவாகப்பட்டு அவை வளர்ந்தன. [3] டிஸ்டன் ஆசிரியர்கள் கூறின்படி, "பண்டைய மனிதன் மணல், பருமணல், பவளம், எலும்பு, மீன் தோல், நறைநறைப்பான மரம், மணல் தண்ணீருடன் தொடர்புடைய பல்வேறு கடினத்தன்மை கொண்ட கல் போன்றவற்றை தேய்ப்புப் பொருளாகவும் அரமாகவும் பயன்படுத்தினான்." பயன்படுத்தினான் [4]

வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலத்தில் பல்வேறு வகையான அரங்கள் மற்றும் முள்ளரங்கள் பயன்படுத்தபட்டன. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட முள்ளரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது கிமு 1200-1000 ஆண்டுகளுக்கு முந்தையது. தொல்லியல் ஆய்வாளர்கள் அசிரியர்களால் பயன்படுத்தப்பட்ட இரும்பினால் செய்யப்பட்ட முள்ளரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது கிமு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும்.

நடுக்காலத்தில் அரங்கள் அதற்கு முன்பிருந்தே கொல்லர்களின் திறமையால் நன்கு மேம்பட்டிருந்தன. [5] 11 ஆம் நூற்றாண்டில், கடினப்படுத்தப்பட்ட அரங்கள் ஏற்கனவே இருந்தன, அவை இன்றைய கண்களுக்கு கூட மிகவும் நவீனமாகத் தோன்றும். [5] இவை புவியியல் ரீதியாக, வணிகம் மூலம் பரவலாக பரவியிருந்தாலும். இது பரவலாக அனைவரிடமும் இல்லை-அதாவது, பல கொல்லர்களும் கூட இவற்றைக் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, 13 ஆம் நூற்றாண்டில், பாரிசில் இரும்பிலானான அலங்கார வேலைப்பாடுகள் அரத்தின் உதவியுடன் திறமையாக செய்யப்பட்டது. ஆனால் இந்த செயல்முறை சில தலைசிறந்த கைவினைஞருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. [5]

வகைகள்[தொகு]

மூன்று வகையான குறுக்குச்சாய்வுக்கோட்டரங்கள்

அரங்கள் பல்வேறு வகையான பொருட்களில், அளவுகளில், வடிவங்களில் வருகின்றன. ஒரு அரத்தின் வடிவம் தட்டையாக, வட்டமாக, அரை வட்டமாக, முக்கோணமாக, சதுரமாக, கத்தி முனை போன்று அல்லது வேறு எந்த சிறப்பு வாய்ந்த வடிவங்களிலும் அமைக்கபடுகின்றன. எஃகு அரங்கள் கரிமமிகு எஃகிலிருந்து (1.0 முதல் 1.25% கரி) தயாரிக்கப்படுகின்றன (1.0 முதல் 1.25% கார்பன்) மேலும் அவை கடினப்படுத்தப்பட்ட [6] அல்லது புறக்கடினப்பட்டவையாக இருக்கும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரம்&oldid=3673658" இலிருந்து மீள்விக்கப்பட்டது