தேய்ப்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரத் தேய்ப்பரம்
குளம்புத் தேய்ப்பரம் பயன்படுத்தும் குதிரை ஆயம்

பருவரம் அல்லது தேய்ப்பரம் (Rasp) மரம் அல்லது பிற பொருள்களுக்கு வடிவம்தரப் பயன்படுத்தும் கைக்கருவியாகும். இது ஒரு கூர்முனையும் பிறகு நீண்ட தண்டும் அதாவது நடு உடலும் இறுதியாகஅடிப்பகுதியும் ( heel or bottom) கொண்டிருக்கும். மரம் அல்லது நெகிழிக் கைப்பிடியில் செருக, ஒரு கூம்பாப்பும் கடைசியில் இருக்கும். இதன் தண்டில் பரவலாகக் கூரிய பற்கள் இருக்கும். இவை அரங்களை விடக் கரடாக அல்லது பருவட்டாக வெட்டுகின்றன.ஒரு குறுகிய கூரான தொடு முனை இவ்வகைக் கருவிகள் அனைத்திற்கும் பொதுவானது. இவ்வமைப்பு ஒரு கைப்பியில் பொருத்தப்படுகிறது [1].

பயன்பாடுகள்[தொகு]

மரவேலையில் இவை வளைந்த பரப்புகளில் இருந்து வேகமாக மரத்தை வெட்டி எடுக்க உதவுகின்றன. இவை drawknife ஐ விடகுறைவாகவே மரத்தை வெட்டி எடுக்கின்றன. எனவே இவற்றைக் கட்டுபடுத்துவது எளிது. இவை சொரசொரப்பான ப்ரப்பை உருவாக்கினாலும் அவ்வெட்டுப்பரப்பை மேலும் நயமான அரங்களால் சீர்செய்யலாம். தேய்ப்பரங்களில் பல வகைகளும் வடிவங்களும் உள்ளன. அரைவட்ட, முழுவட்ட, தட்டையான வடிவங்களில் இவை அமையலாம். இவை நுண்ணிய முதல் பருநிலை வரை பலவகைகளில் கரட்டரம் ( bastard), பேழையரம் (cabinet) , தச்சரம் ( wood) போல அமையலாம். இவை எல்லாவற்றையுமே பல்வேறு வடிவங்களை உருவாக்கப் பயன்படுத்தலாம். குதிரை ஆயவேலையில் இவற்றை குதிரைக் குளம்பில் உள்ள கூடுதல் பொருளை அகற்றப் பயன்படுத்தலாம்.

இவை அலபாசுட்டர் கற்களை வடிவமைக்கப் பயன்படுகின்றன. அரம்பம் (Saw), வெட்டுளி(Chisel) ஆகியவை இக்கற்களின் கரட்டு வடிவத்தை உருவாக்கப் பயன்படுத்தினாலும் அலபாசுட்டர் சிலையின் இறுதிசீராக்கத்துக்கு தேய்ப்ப்ரங்களையே பயன்படுத்துகின்றனர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lye 1993, ப. 12–13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேய்ப்பரம்&oldid=3673665" இலிருந்து மீள்விக்கப்பட்டது