அரபா குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபா குன்று

அரபா குன்று (Mount Arafah அரபு மொழி: جبل عرفات‎) மக்காவிற்கு தென்கிழக்கில் சுமார் 20 கிமீ தொலைவில் ( 12 மைல்) உள்ள கிரானைட் மலையாகும்[1].அரபா குன்றின் மீது நின்று இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.[2].

அரபா தினம்[தொகு]

அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பர்.அன்றைய தினம் அரபா குன்று அருகில் அனைவரும் ஹஜ் காரியங்கள் செய்வதால் அது அரபா தினம் என்றழைக்க படுகிறது.

அரபா மைதானம்[தொகு]

அரபா மைதானத்தில் ஹஜ் செய்யும் இஸ்லாமியர்

அரபா குன்றை சுற்றியுள்ள சமவெளியானது அரபா மைதானம் என்று அழைக்கப்படுகிறது. ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பர்.அரபா மைதானத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் சுருக்கப்பட்ட மக்ரிப் தொழுகை மற்றும் இஷா தொழுகைக்கு பின் அனைவரும் முஸ்தலிபா செல்வர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபா_குன்று&oldid=3661721" இருந்து மீள்விக்கப்பட்டது