அரசு மேல்நிலைப் பள்ளி, மழையூர்
அரசு மேல்நிலைப்பள்ளி மழையூர் | |
---|---|
முகவரி | |
மழையூர் புதுக்கோட்டை, தமிழ் நாடு, 622301 இந்தியா | |
தகவல் | |
வகை | அரசினர் பள்ளி |
பள்ளி அவை | மேல்நிலை பள்ளி |
வகுப்புகள் | 7 |
கற்பித்தல் மொழி | தமிழ்,ஆங்கிலம் |
அரசு மேல்நிலைப்பள்ளி, மழையூர் (Government Higher Secondary School Mazhaiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மழையூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.[1]
நிர்வாகம்[தொகு]
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மழையூர் அரசுமேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]
பள்ளியில் 1180 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், 35 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் அறிவியல் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.[2]
தேர்ச்சி விவரம் (விவசாய பாடப்பிரிவு)[தொகு]
மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, விவசாய பாடப்பிரிவு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரம் 2010 - 2011 கல்வியாண்டு முதல் 2016 - 2017 வரை.
வரிசை எண் | கல்வியாண்டு | மாணவர்களின் எண்ணிக்கை | அதிகபட்ச மதிப்பெண் | மாணவர்கள் பெயர் | சதவீதம் |
---|---|---|---|---|---|
01 | 2010-2011 | 31 | 165 | சரவணன் | 100 |
02 | 2011-2012 | 49 | 185 | பாரதிராசா | 100 |
03 | 2012-2013 | 36 | 188 | ராசபாண்டி | 100 |
04 | 2013-2014 | 33 | 195 | கார்த்திக் | 100 |
05 | 2014-2015 | 36 | 198 | கனகராசு | 100 |
06 | 2015-2016 | 58 | 200 | செளமியா | 100 |
07 | 2016-2017 | 95 | 197 | கலைவாணி | 100 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மழையூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படுமா?". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/govt-girls-high-school-to-be-started-in-marishyur-827459. பார்த்த நாள்: 6 May 2023.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.