அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலவயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலவயல் மேல்நிலைப்பள்ளியின் புது கட்டிடத்தின் தோற்றம்

அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலவயல் (Government Higher Secondary School, Alavayal) தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் (தாலுகா) ஆலவயல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகும்.[1]

தோற்றம்[தொகு]

இப்பள்ளி 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது. முதலில் மணிவண்ணன் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றினார்.

நிர்வாகம்[தொகு]

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நிர்வாகத்தின் கீழ் தலைமை ஆசிரியர் மற்றும் 27 ஆசிரியர்கள் உட்பட உடற்கல்வி ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் பிரிவுகள்[தொகு]

2017 ஆம் ஆண்டில் இப்பள்ளியில் 750 மாணாக்கர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயின்றனர். மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியல் மற்றும் உயிரியல் பிரிவு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

ஆலவயல் பள்ளி தேர்ச்சி சதவீத பட்டியல்

வசதிகள்[தொகு]

இப்பள்ளிக்கு ரூபாய் 1 கோடி செலவில்[2] புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கல்வி கற்பித்தல் தவிர ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி போன்ற பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]